இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

 












எது கல்வி ?

ஜே. கிருஷ்ணமூர்த்தி


சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்?

பழைய முறைப்படி கல்வி கற்பது செய்கிறீர்களா? அப்படி என்றால், நீங்களே உங்கள் எதிர்காலத்தை அழிப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு  வருகிறீர்கள் என்றே அர்த்தமாகிறது.

கல்வியை கற்பிப்பதில், கற்பதில் ஏராளமான நுட்பங்களும் திறனும் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒருவருக்கு உள்முக பார்வையை அளிக்கும்படி அமைவது முக்கியம். அப்படியல்லாதபோது பிறரை வித தான் உயர்ந்தவர் என்ற ஆணவத்தையே கல்விமுறை உருவாக்கும்.

இன்று உலகம் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மனிதர்கள் செய்யும் பல்வேறு விதமான வேலைகளுக்கு எந்திரங்களை உருவாக்கி வருகிறார்கள். இதன் விளைவாக மனிதர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஓய்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த நேரத்தை நாம் நம்மைப் புரிந்துகொள்ள செலவழிப்பதில்லை. அதற்குப் பதிலாக குறிக்கோள், லட்சியம், அறிவு, பொழுதுபோக்கு என தப்பித்து சென்று கொண்டிருக்கிறோம்.

கல்விச் சிந்தனைகள் பற்றி ஏராளமான சிந்தனைகள் நூல்களாக எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் அவை பற்றி முன் எப்போதும் இல்லாத குழப்பங்களும் நிலவுகின்றன. கருத்து, லட்சியவாதிகள், லட்சியக் குறிக்கோள்கள் ஆகியவை தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு உதவுவதில்லை.இதில் தன்னையே மையப்படுத்திய முறையில் முரண்களையும் சிக்கலையும் உருவாக்குகின்றன. இதன் விளைவாக மனிதர்கள் ஒருவித பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

புதிய உலகம் பற்றிய விவரிப்பு,  குறிக்கோள், லட்சியவாத பிம்பங்கள் என எவையும் ஒரு மனிதரின் இதயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. இதயத்தில் ஏற்படும் மாற்றமே போர்களையும் உலகம் முழுவதும் ஏற்படும் வன்முறைகளையும், பேரழிவுகளையும் தடுக்கும். லட்சியவாத பிம்பங்கள் நடைமுறையில் உள்ள மதிப்புகளை பெரிதாக மாற்றாது.

கல்வி முறையில் செய்யும் மாற்றங்கள் ஒருவரின் வாழ்வை பெரிதும் மாற்றுபவை. எதிர்காலத்தில் ஒருவர் என்னவாக இருப்பார் என்பதை நாம் கண்டறியலாம்.  இதன்மூலம், அவர் எதிர்காலத்தில் தன்னைப் புரிந்துகொள்ள உதவலாம். இதில், தனிப்பட்ட பயன், காரணங்கள் ஏதும் இல்லை. நடைபெறும் செயல்பாட்டை நாம் புரிந்துகொண்டு இருப்பது முக்கியம். இதன்மூலம் நம்மை நாம் யார் என்று எளிதாக அறிந்துகொண்டு விடலாம். ஆனால் அப்படி தெரிந்துகொள்ளும்போது நம்மைப் பற்றி நமக்குள்ளேயே நாம் செய்து வரும் உள்முக போராட்டங்களை நிறுத்துவது முக்கியம்.

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்