காதல் உரையாடல்கள் மட்டும்!-துருவங்கள் நாவல்
துருவங்கள் நாவல்- நக்கீரன்.
---
## மதன் - கார்த்திகா காதல் உரையாடல்கள் (தொகுப்பு)
---
### 1. முதல் சந்திப்பு - மின்னஞ்சல் முகவரியில்
**கார்த்திகா:**
by the way, I'm not 'karthik', I'm karthika and we both seems to be in the same office, (noticed your desk number, starts with 044, our company have only once office in chennai) maybe I'll come directly to your desk If I really want :)
**மதன்:**
good, great to know that!! you are always welcome
**கார்த்திகா:**
do you understand tamil?
**மதன்:**
magalir ani thalaiviku vanakkam :)
**கார்த்திகா:**
thamasu :), anyway ippavae lateu, nan kalamburaen, appuram parpom, bye!!
**மதன்:**
ok, bye!!
---
### 2. நேரில் சந்திப்பு - கல்யாணம் ஆகி நாலு பசங்க
**(கார்த்திகா நேரில் வந்து மதனின் டெஸ்க்கில்)**
**கார்த்திகா:**
என்ன பிரதர், உங்க டெஸ்க் வந்தாச்சு, போதுமா? இப்பவாச்சும் சொல்லிக் கொடுப்பீங்களா?
**மதன்:**
வாங்க சிஸ்டர், உட்காருங்க, என்ன சாப்பிடறீங்க, காப்பி ஆர் டீ?
**கார்த்திகா:**
இருக்கட்டும் ப்ரதர், பரவாயில்லை
**மதன்:**
லிப்ட்ல வரலையா, மூச்சு வாங்குது, எந்த ப்ளோர்ல இருந்து நடந்து வந்தீங்க?
**கார்த்திகா:**
மறுபடியும் உங்க கிட்ட ஏமாற மாட்டேன், எனக்குத் தான் உங்க இடம் தெரிஞ்சிருச்சில்ல தேவைப்படும்போது நானே வர்றேன்
**மதன்:**
மொக்க, நிக்னேமோ? பொண்ணுங்க கூட அதிகம் பேசுவீங்களா? நிறைய கேர்ள் பிரண்ஸ் இருக்காங்களோ?
**கார்த்திகா:**
கொஞ்ச நாள் கழிச்சு நீங்களே புரிஞ்சுக்குவீங்க, வந்த வேலையை ஆரம்பிக்கலாமா?
**கார்த்திகா:**
ஆமா? ஷெல் ஸ்கிரிப்டிங் கத்துக்க எத்தனை நாள் ஆகும்? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவாகும்?
**மதன்:**
என்னது? எத்தன நாள்? எவ்வளவு நேரமா? ஒரே நாள், ஐஞ்சு நிமிஷம்...
**கார்த்திகா:**
கிண்டலா?
**மதன்:**
சீரியஸ்சாங்க...
**கார்த்திகா:**
இல்ல இல்ல, நிறைய தெரிஞ்சுக்கணும், ஷெல் ஸ்கிரிப்டிங், லினக்ஸ்
**மதன்:**
லினக்ஸ்னா என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க?
**கார்த்திகா:**
லினக்ஸ் விண்டோஸ் மாதிரி ஒரு OS...
**மதன்:**
லினக்ஸ் வெறும் OS இல்லீங்க, அதுக்குப் பின்னாடி ஒரு சரித்திரமே இருக்கு.
**கார்த்திகா:**
ஹிஸ்டரி? சொல்லுங்க கேட்போம்
**மதன்:**
அதுக்கு நாம 1950 ஸ்குப் போகணும் கொஞ்சம் பெரிய கதை, இப்பவே நைட் 09:00 மணி, என்ன நைட் ஸ்டேயா?
**கார்த்திகா:**
நோ வே, பட் கண்டிப்பா நீங்க இந்தக் கதையைச் சொல்றீங்க, சரி நான் கிளம்பறேன், சியூ பாய்!!
**மதன்:**
அடுத்து எப்போ?
**கார்த்திகா:**
தெரியாது, நானே வர்றேன். பாய்!!
**மதன்:**
டேக் கேர், பாய்!!
---
### 3. யுனிக்ஸ் பிறந்த கதை - இரண்டாவது சந்திப்பு
**(கார்த்திகா மீண்டும் மதனின் டெஸ்க்கில்)**
**கார்த்திகா:**
என்ன பிரதர், டாஸ்க் எதுவும் இல்லையா, நியூஸ் படிச்சிட்டு இருக்கீங்க.
**மதன்:**
வேலை எல்லாம் முடிச்சாச்சா?
**கார்த்திகா:**
லினக்ஸ் கதையைக் கேட்க சீக்கிரம் வந்துட்டேன். ஆரம்பிங்க.
**(யுனிக்ஸ் பிறந்த கதை முழுவதும் சொல்கிறான்)**
**கார்த்திகா:**
சரி மேல சொல்லுங்க, ரொம்ப இன்ட்ரஸ்டிங்காப் போகுது
**மதன்:**
...அதப்பத்தி அப்புறமாச் சொல்றேன்.
**(சுரேஷ் இடையில் குறுக்கிட)**
**கார்த்திகா:**
பசங்களா? எனக்கா?
**மதன்:**
நீங்க சொன்ன அதே 'ஐயாம் 32 நவ்' பொய், அத அப்டியே மெயின்டேன் பண்ணுங்க, அதுதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது
**கார்த்திகா:**
என்ன பாத்தா 32 மாதிரியாத் தெரியுது
**மதன்:**
போனானே அவனும் இதத்தான் கேட்டான். அதுக்கு நான் ஒன்னு சொன்னேன், நம்பிட்டான்
**கார்த்திகா:**
என்ன சொன்னீங்க?
**மதன்:**
சொன்னா டென்ஷன் ஆக கூடாது
**கார்த்திகா:**
நான் ஏற்கனவே கடுப்புல தான் இருக்கேன், என்ன சொன்னீங்க?
**மதன்:**
ஹய் கிளாஸ் ஆன்டிங்கள்லாம் சின்ன பொண்ணாத் தெரிய பப்புக்குப் போய் வைன் அடிப்பாங்க அதனால்தான் நீங்க சின்ன பொண்ணா தெரியறீங்கன்னு சொன்னேன்
**கார்த்திகா:**
என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க
**மதன்:**
சரி, நாளைக்கு எல்லாரையும் கூப்டு, அட்மின் ஆன்ட்டி இல்ல சின்ன பொண்ணுதான், அப்ளிகேஷன் போட்றவங்க போடலாம்னு அனவுன்ஸ் செஞ்சிடறேன் போதுமா?
**கார்த்திகா:**
நீங்க சும்மா இருந்தாலே போதும், நான் ஆல்ரெடி ரிசர்வ்டு, கதைக்கு வாங்க
---
### 4. முதல் ஐலக்சி மீட்டப் - உணர்வுகளின் தொடக்கம்
**(IIT மீட்டப்பில் கார்த்திகா வருகை)**
**கார்த்திகா:**
என்ன மிஸ்டர் மதன் கண்டுக்கவே மாட்டென்றீங்க?
**மதன்:**
தட் என்ட்ரீ, அப்படியே சினிமால ஹீரோயின் காலேஜ் கிளாஸ் ரூமில என்டர் ஆகும்போது ஒரு கேமரா ஆங்கிள் வைப்பாங்களே, அவ்வளவு பியூட்டி புல்லா இருந்துச்சு
**கார்த்திகா:**
ஆங்கிள் மட்டும்தான் ப்யூடிபுல்லா?
**மதன்:**
நீங்க அழகா இருக்கீங்கன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா. அதான் இந்த ரூமே ஸ்டன் ஆச்சே
**கார்த்திகா:**
இருந்தாலும் உங்க ரெஸ்பான்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கனும்ல
**மதன்:**
இந்த இடத்துல இத சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன், இந்த பிளாக் அண்ட் வொயிட் ட்ராஸ் செம்மையா இருக்கு. அதுவும் இந்த ஸ்பெக்ட்ஸ், இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் நீங்க ஸ்பெக்ட்ஸ் போட்டு பாக்குறேன்
**கார்த்திகா:**
யாரையாவது இம்ப்ரஸ் பண்ணனும்னா இப்படி ஸ்பெக்ஸ் போட்டு வருவேன்
**மதன்:**
அந்த யாரோ இம்ப்ரஸ் ஆனாரா?
**கார்த்திகா:**
அத நீங்கதான் சொல்லனும்
**மதன்:**
ஸ்பெக்ட்ஸ் போட்டா நீங்க வேற லெவல்
**(மீட்டப் முடிந்து டீ பார்ட்டி, பின் ரெஸ்டாரன்ட்)**
**மதன்:**
நீங்களும் டீ சாப்பிட கேன்டீன் வறீங்களா?
**கார்த்திகா:**
அப்கோர்ஸ் எஸ்
**மதன்:**
வண்டி வச்சிருக்கீங்களா? இல்ல லிப்ட் வேணுமா?
**கார்த்திகா:**
ஐ ஹவ்
**(இருவரும் முஸ்லிம் ரெஸ்டாரன்டில்)**
**மதன்:**
என்ன சாப்பிடுறீங்க? (கார்த்திகா முந்திக்கொள்ள)
**கார்த்திகா:**
ஒரு பெப்பர் பார்பிக்யூ சிக்கன், ஒரு மட்டன் பிரியாணி
**மதன்:**
இன்னொரு மட்டன் பிரியாணி சேர்த்து கொண்டு வாங்க
**கார்த்திகா:**
பார்பிக்யூ சிக்கன் எனக்கு மட்டும் தான் நீங்க கை வைக்க கூடாது
**மதன்:**
நான் வெஜ் அவ்வளவு புடிக்குமா?
**கார்த்திகா:**
பாய் கடை பிரியாணின்னா சும்மாவா?
**மதன்:**
செம க்யூட்டா இருக்கீங்க
**கார்த்திகா:**
அதான் அப்பவே சொல்லிட்டீங்களே இப்ப என்ன?
**மதன்:**
அப்ப கண்ணுக்கு அழகாத் தெரிஞ்ச கார்த்திகாவைப் பார்த்துச் சொன்னேன் இப்ப பார்பிக்யூ சிக்கனுக்காக சண்ட போட்ற கார்த்திகாவைப் பார்த்துச் சொல்றேன்
**கார்த்திகா:**
போதும்
**(மரியான் பாடல் ஒலிக்க)**
**கார்த்திகா:**
இதுல சிச்சுவேஷன் சாங் வேர, யூ ஆர் மேட்
**(சாப்பிட்டு முடித்து வெளியில்)**
**மதன்:**
தேங்ஸ்
**கார்த்திகா:**
எதுக்கு
**மதன்:**
யூ மேட் திஸ் டே மெமரபிள்
**கார்த்திகா:**
பார் மீ டூ, டுடே இஸ் ஸ்பெஷல்
**(மரியான் பாடல் மீண்டும் ஒலிக்க)**
**கார்த்திகா:**
என்ன போக விட மாட்டீங்க போல, டேம் தட் விஜய் பிரகாஷ் வாய்ஸ், ஐ லவ் திஸ் சாங்
**மதன்:**
ஹவ் எ குட் ஸ்லீப்
**கார்த்திகா:**
யூ டூ
---
### 5. யூனிவர்சின் நிறம் - நெருக்கம் அதிகரிக்கிறது
**(ஆபீஸில் பைல் சிஸ்டம் பாடம் முடிந்து டீ பேன்ட்ரியில்)**
**கார்த்திகா:**
சோ, மதனுக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்குமோ?
**மதன்:**
உங்களுக்குப் பிடிக்காதா? விஜய் பிரகாஷ் எல்லாம் தெரிஞ்சிருக்கு?
**கார்த்திகா:**
எனக்கும்தான், யார் பேவரெட் கம்போசர்?
**மதன்:**
நீங்க சொல்லுங்க
**கார்த்திகா:**
பர்டிகுலர் இல்ல, பட் ஏஆர்ஆர், ஹரிஸ், அனி இவங்க சாங்ஸ் மிஸ் பண்ண மாட்டேன். நீங்க?
**மதன்:**
இசைஞானி அப்படின்னு ஒருத்தர் இருக்காரே அவர பிடிக்காதா?
**கார்த்திகா:**
புடிக்காதுன்னு சொல்லமுடியாது, பட் ஐ லைக் ஏஆர்ஆர் மோர் தன் எனிவொன்...
**மதன்:**
...எல்லா கம்போசர்ட்ட இருந்தும் ஏதாவது ஒரு நல்ல மெலோடி அல்லது பெப்பியா ஒரு சாங் வரும் அந்த சாங்ஸ்தான் எனக்கு புடிச்சது
**கார்த்திகா:**
எனக்கென்னமோ அன்னைக்கு நைட் சாப்பிட்டுக் கெளம்பும் போது நீங்க போட்ட சிச்சுவேஷன் சாங்க வெச்சு பாத்தா என்ன மாதிரி ஏஆர்ஆர் ரசிகன் தான்னு தோணுது
**மதன்:**
நீங்க இளையராஜா ரசிகையா இருப்பீங்களோன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான்
**கார்த்திகா:**
சரி இப்ப கலர், எந்த கலர் ரொம்ப பிடிக்கும்
**மதன்:**
என்னங்க இன்டர்வியூல கேக்குற மாதிரி கேக்கறீங்க
**கார்த்திகா:**
அப்படித்தான் வச்சுக்கோங்க, பதில் சொல்லுங்க
**மதன்:**
பிளாக், பியூர் பிளாக்
**கார்த்திகா:**
நெனச்சேன் இதத்தான் சொல்லுவீங்கன்னு, அது ஏன் எல்லா பசங்களும் ஒரே ஆன்சர் சொல்றீங்க...
**மதன்:**
ரொம்ப சிம்பிள், மத்த எந்த கலர் பாக்கனும்னாலும் உங்களுக்கு லைட் சோர்ஸ் தேவ, ஆனா பிளாக்கிற்குத் தேவையில்லை, இந்த யூனிவர்சே பிளாக்குக்குள்ளதாங்க இருக்கு
**கார்த்திகா:**
பஞ்ச் டைலாக்கு?
**மதன்:**
இல்லைங்க, பேக்ட்
**மதன்:**
உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்னு சொல்லவே இல்லையே?
**கார்த்திகா:**
வைட், மில்கி வைட்
**மதன்:**
லைட் சோர்ஸ்?
**கார்த்திகா:**
லைட் சோர்சாவே இருந்தாலும் பிளாக்குக்கு உள்ளத்தானே இருக்கேன்
**(இருவரும் புன்னகையுடன் கண்களால் பேசுகின்றனர்)**
---
### 6. நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இசைப் போட்டியும் உணர்வுகளும்
**(எச்ஆர் நிகழ்ச்சியில் மதன் பாடுகிறான் - "சின்னக் கண்ணன் அழைக்கிறான்")**
**(கார்த்திகா பாடுகிறாள் - "யமுனை ஆற்றிலே")**
**மதன்:**
கங்கிராட்ஸ்
**கார்த்திகா:**
நியாயமா இது உங்களுக்கு வந்திருக்கனும், தட் சாங் வாஸ் அமேசிங், எப்படி உங்களுக்கு அந்தப் பாட்டு தெரியும்?
**மதன்:**
ஒரு டை ஆர்டு இளையராஜா பேனுக்கும் எனக்கும் வாக்குவாதம் நடந்தப்ப அவர் இந்தப் பாட்ட பத்திச் சொன்னார்...
**கார்த்திகா:**
நீங்க பாடும்போது அந்த வைப் இருந்தது, அதுவும் என்ன பாத்து அந்த வரிகளை நீங்க பாடும்போது உள்ள என்னவோ பண்ணுச்சு
**மதன்:**
ஐ ஷுன்ட் ஆவ் டன் தட்
**கார்த்திகா:**
தட்ஸ் ஓக்கே, ஐ டூ ஷுன்ட் லெட் மை எமோஷன்ஸ் அவுட், பீப்பிள் மைட் ஹவ் நோட்டீஸ்டு ரைட்?
**மதன்:**
மே பி, விடுங்க, பாத்துக்கலாம், ஆமா, நீங்கதான் இளையராஜா பாட்டு கேட்டதில்லையே அப்புறம் எப்படி யமுனை ஆற்றிலே வந்தது?
**கார்த்திகா:**
என்னத்தான் ஏஆர்ஆர் ரசிகையா இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்துகிட்டு இளையராஜா சாங்ஸ் கேட்காம இருக்க முடியுமா... எப்படி இருந்தது நான் பாடினது?
**மதன்:**
அதான் ப்ரைசே கொடுத்துட்டாங்களே அப்புறம் என்னங்க?
**கார்த்திகா:**
அவங்க கெடுத்தது இருக்கட்டும் நீங்க சொல்லுங்க?
**மதன்:**
உண்மையிலேயே கிருஷ்ணரோட லவர் கிருஷ்ணர நெனச்சுப் பாடின மாதிரி இருந்துச்சு
**கார்த்திகா:**
எனிவே இட்ஸ் ஆல்ரெடி லேட். தேங்க்ஸ் பார் தட் சாங்
**மதன்:**
தேங்க்ஸ் பார் தட் சாங் டூ, டேக் கேர்
---
### 7. ஒன் ஆப் அஸ் - புரிதலும் நெருக்கமும்
**(ஆபீஸில், மதனின் கியூபிக்கலில்)**
**கார்த்திகா:**
எனிவே, நேரமாச்சு, சீ யூ நெக்ஸ்ட் டைம் காம்ரேட்
**மதன்:**
காம்ரேட்?
**கார்த்திகா:**
பிகாஸ் ஐ ஆம் ஆல்சோ ஒன் ஆப் ஆஸ்
**மதன்:**
டேக் கேர் ஆஃப் மை சிஸ்டர் காம்ரேட்
---
### 8. குலசாமி - கஷ்டத்தில் கைகொடுத்த காதல்
**(கயலின் வீட்டில் பிரச்சனை - மதன் குறுக்கிடுகிறான்)**
**(கார்த்திகாவின் பால்கனியில் நள்ளிரவு உரையாடல்)**
**கார்த்திகா:**
நெவர் எவர் டு தட் ஸ்டுப்பிட் திங் அகெய்ன்
**மதன்:**
எத சொல்றீங்க
**கார்த்திகா:**
அவன் கழுத்துல நீங்க கத்தி வெச்சது, கழுத்த வெட்டிட்டீங்கன்னே நெனச்சேன், ஹவ் டிட் யூ டூ தட்
**மதன்:**
பயம்தான், கழுத்துக்குக் கத்தி வரும்போது சும்மா இருக்க முடியுமா...
**கார்த்திகா:**
ஐ வாஸ் சோ ஸ்கேர்ட்...
**மதன்:**
எனக்கும் அப்பத்தான் வெறி அடங்குச்சு
**கார்த்திகா:**
எனிவே, தேங்க் யூ வெரி மச் காம்ரேட்
**மதன்:**
கமான்
**(பால்கனியில் மேலும் உரையாடல்)**
**கார்த்திகா:**
எப்டியோ என் அப்பாவ இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க
**மதன்:**
நீங்க வேற, உங்க அப்பாகிட்ட சண்ட போடாம இருந்ததுக்கு சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்கேன்
**கார்த்திகா:**
ஏன் எங்க அப்பா என்ன செய்தார்?
**மதன்:**
அவரு நீங்க என்னதான் கத்தினாலும் ஸ்கூல் டீச்சர்ஸ் புதுசா எதையும் கத்துக்க மாட்டாங்கன்னு சொன்னாரே...
**கார்த்திகா:**
எனக்கென்னமோ அவருக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நினைக்கிறேன்...
**மதன்:**
உன் கிட்டப் பழக ஆரம்பிச்சப்போ ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு...
**கார்த்திகா:**
நான் ஒன்னும் என் அம்மா மாதிரி சாப்ட் இல்ல
**மதன்:**
அமைதியா இருக்கிறவங்க எல்லாம் சாப்ட் கேரக்டர்னு யார் சொன்னது, அவங்களுக்குள்ள வேற ஒரு மிருகம் இருக்கும்
**கார்த்திகா:**
உங்களுக்கு எப்படித் தெரியும்?
**மதன்:**
நானும் இன்ட்ரோவர்ட் தான்
**கார்த்திகா:**
நம்பிட்டேன்
**கார்த்திகா:**
ஸ்டாப், நாட் அகெய்ன்
**மதன்:**
நீங்க மட்டும் கிட்ட வரீங்க?
**கார்த்திகா:**
அதுவா, நீங்க கண்ட்ரோலா இருக்கீங்களா இல்லையான்னு செக் பண்றேன்
**மதன்:**
ரொம்ப கஷ்டப்பட்டு கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே போனோம்னா கண்டிப்பா பார்டர் கிராஸ் பண்ணிடுவேன், ரொமான்ஸ் பண்றத இன்னொரு நாளைக்கு கண்டினியூ பண்ணலாமா?
**கார்த்திகா:**
கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டு இருக்கோமோ
**மதன்:**
விட்டிருந்தா என் விர்ஜினிட்டிய வேட்டையாடி இருப்பீங்க
**(இருவரும் சிரிக்கின்றனர்)**
**மதன்:**
இட்ஸ் ஆல்ரெடி மிட்நைட் த்ரீ தர்ட்டி, உங்களுக்கு தூக்கம் வரலையா?
**கார்த்திகா:**
லைட்டா வருது, உங்களுக்கு?
**மதன்:**
எனக்கும்தான், ஆறு மணிக்கு வேற எழனும், தூங்கப் போலாமா?
**கார்த்திகா:**
ஆமாம், கொஞ்ச நேரமாச்சும் தூங்கனும்...
**மதன்:**
குட் நைட்
**கார்த்திகா:**
ஸ்வீட் ட்ரீம்ஸ்
---
### 9. பதினாறும் பெற்று - கார்த்திகா மறைந்து வரும் அத்தியாயம்
**(காரில் மதனுக்கு முன்னால் கார்த்திகா மறைந்து வருகிறாள்)**
**(மதன் தனது காதலை கார்த்திகாவின் அப்பாவிடம் சொல்ல)**
**மதன்:**
சார், இப்ப நான் சொல்றத எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியல, நான் இங்க வந்ததுல இருந்து ஏதோ தப்பு பண்ணிட்டு இருக்குற மாதிரி இருக்கு... நான் கார்த்திகாவை பிரண்டா மட்டும் பார்க்கல, அவங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன்... உங்களுக்கும் ஆண்டிக்கும் சம்மதம்னா எனக்கு ஒரு போன் பண்ணுங்க, எங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வறேன்
**(கார்த்திகா கோபத்தில் மதனை அறைகிறாள்)**
**கார்த்திகா:**
இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுனீங்க, பிரண்டுன்னு கூடப் பாக்க மாட்டேன் செருப்பு எடுத்து அடிச்சிடுவேன், உங்களுக்கு என்ன தெரியும் என் அப்பாவைப் பத்தி?
**(மதன் கார்த்திகாவின் வீட்டை விட்டுப் புறப்படுகிறான்)**
**மதன்:**
அட்டாக் பண்ணிட்ட இல்ல. நல்லாயிரு
---
### 10. அந்த ஒரு நம்பர் - பிரிவு, வலி, மீண்டும் சந்திப்பு
**(கயல் மதனுக்கு போன் செய்கிறாள் - கார்த்திகாவின் குடும்ப வரலாற்றைச் சொல்கிறாள்)**
**(மதன் வருத்தத்தில் அழுகிறான்)**
**(கம்பெனி பிராட்காஸ்டில் மிஸ்டர் எக்ஸ் - மதன் தான் கார்த்திகாவின் நம்பரை தேடி எடுத்தது)**
**(ஆடிட்டோரியத்தில் மதனும் கார்த்திகாவும் மீண்டும் சந்திக்கின்றனர்)**
**கார்த்திகா:**
(மதன் அருகில் வந்து அமர்ந்து) ஏன் இப்படிச் செய்தாய்?
**மதன்:** (தலை குனிகிறான்)
**கார்த்திகா:** (மதனின் போனை எடுத்து தன் நம்பரை சேமித்து கால் செய்கிறாள்)
**(கார்த்திகா மதனின் போனில் IRC மெசேஜை பார்க்கிறாள் - மதன் தான் மிஸ்டர் எக்ஸ் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறாள்)**
---
### 11. உடன்கட்டை - சுரேஷ் கல்யாணமும் உடைந்த உறவும்
**(சுரேஷின் பார்ம் ஹவுஸில் மதனும் கார்த்திகாவும் மீண்டும் சந்திக்கிறார்கள்)**
**(கார்த்திகா மதனின் ரூமுக்கு வாட்டர் பாட்டில் கொடுக்க வருகிறாள் - மதன் குடும்பத்தை பார்க்கிறாள்)**
**(கல்யாணத்தில் இருவரும் பாடுகிறார்கள் - உணர்வுகள் வெளிப்படுகின்றன)**
**(கார்த்திகா கடலை நோக்கி ஓடுகிறாள்)**
---
### 12. உடன்கட்டை - கடற்கரை உரையாடல் (மிக முக்கியமான காதல் காட்சி)
**கார்த்திகா:**
எதுக்கு இங்க வந்தீங்க?
**மதன்:**
இதே கேள்விய உங்கள்ட கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்
**கார்த்திகா:**
நான் சாகப்போறேன்
**மதன்:**
உங்க வீட்ல, நல்ல விஷயம் செய்றதுக்கு முன்னாடி நேரம் காலம் பாக்க மாட்டீங்களா, உங்க அப்பாதான் கம்யூனிஸ்டுன்னா உங்க அம்மாவாச்சும் பொண்ணுகிட்ட தற்கொலை பண்ணிக்க நல்ல நேரம் எதுன்னு சொல்லிக்கொடுத்திருக்க வேணாமா?
**கார்த்திகா:**
இன்னொரு முறை என் அப்பா அம்மாவை இழுத்த, கண்டிப்பாச் செருப்பால அடி வாங்குவ
**மதன்:**
அவ்வளவு பாசம் இருக்குறவ கடல் கிட்ட வரதுக்கு முன்னாடி அவங்கள நெனச்சு பார்த்திருக்கனும்ல?
**(கார்த்திகா கடல் அருகில் அமர்கிறாள், மதனும்)**
**கார்த்திகா:**
பேச்சுக்காவது ஏன் அழர, அழாதன்னு சொல்லலாம்ல?
**மதன்:**
நம்ம மூளை ஏமோஷன்ச கன்ரோல் பண்ண நிறைய செக்பாயின்ட்ஸ் வெச்சிருக்கோம், அத எல்லாத்தையும் ஒடச்சிக்கிட்டு வரதுதான் அழுகயாம்...
**கார்த்திகா:**
எதுக்குக் கயல் கிட்ட அப்படி சொன்ன?
**மதன்:**
நீதான் என்ன இன்னைக்கு முதலில் அழவச்ச? உன்னை யாரு அந்த பாட்டு பாடச் சொன்னது? நீ என்ன பாத்து பாடும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?
**கார்த்திகா:**
நீ பாடும் போது என்னால அங்க நிக்க முடியல, ஏந்தான் பசங்க லவ் பெயிலியருக்கு மட்டும் இந்தப் பாட்டு எழுதுறவங்க இப்படி எழுதுறாங்களோ
**கார்த்திகா:**
என்ன வேற என்ன பண்ண சொல்ற, உன்னோட இருந்ததை என்னால மறக்க முடியல, என் அப்பா அம்மாவ விட்டுட்டும் என்னால வர முடியால... இதெல்லாம் யோசிக்குறப்போ பேசாம செத்துடலாம்னு தோனுச்சு
**மதன்:**
(அமைதியாக கார்த்திகாவை பார்த்தான்)
**கார்த்திகா:**
நான் செத்திருந்தா என்ன பண்ணி இருப்ப?
**மதன்:**
நானும் செத்திருப்பேன்
**கார்த்திகா:**
காதலுக்காக உயிரை விடுவது ஸ்டுப்பிடிட்டின்னு சொன்ன மதன் எங்க போனாரு?
**மதன்:**
இப்பவும் அதைத்தான் சொல்றேன், காதலுக்காக உயிரை விடுவது ஸ்டுப்பிடிட்டின்னு, ஆனா என்னால ஒரு பொண்ணு தன் உயிர விடுரான்னா அவளுக்காக நான் என் உயிரை விடுவது தான நியாயம்...
**கார்த்திகா:**
என் வீட்ல நீயும் நானும் சேர்ந்து படம் பார்த்ததை என்னால மறக்கவே முடியல... அந்த குணா படம் என்ன போட்டு கொன்னுக் கிட்டு இருந்துச்சு...
**மதன்:**
கயல் சொன்னதுனால தான் உன் குடும்பத்த பத்தி எனக்குத் தெரிய வந்துச்சு. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு புரிஞ்சது...
**கார்த்திகா:**
உன் அப்பா ஆசைப்பட்டபடி வீட்ல இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சிட்ட, பொண்ணு பாக்க வந்தாங்களா?
**மதன்:**
என்ன பொண்ணு பாக்க வர்றது இருக்கட்டும், நீ பொண்னு பாக்கப் போனியாமே...
**கார்த்திகா:**
அந்த இன்சிடென்ட்ல இருந்து என் அப்பா யாரையும் பொண்ணு பாக்கக் கூப்பிடல...
**மதன்:**
நான் பண்ணதுக்கு இந்நேரத்துக்கு உனக்கு கல்யாணம் ஆகி வயிறு வீங்கியிருக்கும்னு நெனச்சிருந்தேன்...
**கார்த்திகா:**
ஆஸ்பிட்டல்ல சுரேஷ் அம்மா முன்னாடி என்ன வெச்சு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க இல்ல? அப்பக்கூட நான் உன் கூட வராததுதான் உனக்குத் தப்பாத் தோணுச்சு இல்ல?
**மதன்:**
என் அப்பா கிட்ட போய் நான் பேச வேணாமா?
**கார்த்திகா:** (கடலை பார்க்கிறாள்)
**மதன்:**
அந்த காலண்டர் பாத்துத் தொலைச்சேன், உன் அப்பா வேற அப்படிச் சொன்னதும் பயங்கரமா டென்ஷனாயிடுச்சு...
**கார்த்திகா:**
அந்த சாப்ட்வேர் நீயே ரெடி பண்ணியா?
**மதன்:**
அது ஒரு சாதாரண மியூசிக் ப்ளே பேக் சர்வர் சாப்ட்வேர்...
**கார்த்திகா:**
இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எல்லாம் அவங்களோடதுதான் ஆனா அத எங்க வைக்கனும் எப்படி வைக்கனும்னு நீதான் டிசைன் பண்ணியாமே...
**மதன்:**
டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்ஸ்மா, கண்ட எடத்துல வைக்கக்கூடாது...
**கார்த்திகா:**
உண்மை தான், அதுவும் நாலு பக்கமும் இருந்த ஒஎல்இடி ஸ்க்ரீன்ஸ்ல வந்த விசுவல்ஸ், டிரைவின் தியேட்டர்ல படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு... ரொம்ப தேங்க்ஸ், இப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொண்டு வந்ததுக்கு
**மதன்:**
நாம கிப்ட் கொடுத்தவுடனே முடித்திருக்கலாம், தேவையில்லாம பாட்டு பாடி, எமோஷனல் ஆகி, இப்ப இங்க உட்கார்ந்து கிட்டு இருக்கோம்
**(இருவரும் புன்னகைக்கின்றனர்)**
**மதன்:**
யாராவது லினக்ஸ் சம்மந்தப்பட்டது ஏதாவது சின்னதாக் கேட்டாக் கூட அவங்க கிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிடுவேன்... நீ என் லைஃப்ல வந்து நான் பேசுறது இரசிச்சிக் கேட்கும்போதுதான் எனக்கே கான்பிடன்ட் வந்தது... நீ இல்லாம வேற ஒருத்தி வந்து நான் பேசுறதுக் கேட்டுட்டு உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனுக்கு வாக்கப்பட்டுட்டோமோன்னு வேதனப்படப்போறா...
**கார்த்திகா:**
அதனாலத்தான் சாமியார் வேஷம் போட்டுக்கிட்டு பொண்ணு பாக்கப் போனியா?
**மதன்:**
தாடி வந்தா அதுக்கு நான் என்ன பண்றது. அப்ப தாடியோட சாமியார் மாதிரி இருந்தான் பாரு, அவன் தான் உண்மையான மதன்...
**கார்த்திகா:**
அந்தச் சாமியார் பொண்ணு பாக்கப் போன பொண்ணா நான் இருந்திருக்கனும்
**மதன்:**
இருந்திருந்தா? பாத்துட்டு என்ன சொல்லியிருப்ப?
**(மதன் மெதுவாக எழுந்து உட்கார்ந்திருந்த கார்த்திகாவின் முன் வந்து)**
**மதன்:**
இந்தச் சாமியார கட்டிக்க சம்மதமா?
**(கார்த்திகா தன் இரு கைகளையும் மதனிடம் ஒப்படைக்கிறாள் - மதன் முத்தமிடுகிறான் - கார்த்திகா மதனின் நெற்றியில் முத்தமிடுகிறாள்)**
---
### 13. இனிதே தொடங்கிய பயணம் - இறுதி சந்திப்பும் திருமணமும்
**(திருமணத்திற்கு முந்தைய நாள் - காஞ்சிபுரத்தில்)**
**(இருவரும் பாடுகிறார்கள் - "கண்ணே கனியே உனைக் கை விடமாட்டேன்")**
**(இரவு - கார்த்திகாவின் வீடு)**
**மதன்:**
(கார்த்திகாவின் புத்தகத்தை படித்து) 10 இந்த பைனரிய டெசிமலா கன்வெர்ட் பண்ணா டூ, விமன்... 01 டெசிமலா கன்வெர்ட் பண்ணா ஒன், மென்... ரெண்டு பேரும் சேர்ந்தா மூணாவதா ஒரு உயிர் உருவாங்கும்றத சிம்பாலிக்கா 11 அப்படின்னு சொல்லி இருக்காருன்னு தோனுது...
**கார்த்திகா:**
ஒரு முடிவோடத்தான் ரூமுக்குள்ள வந்திருக்கீங்க?
**மதன்:**
அப்ப இன்னைக்கு கேம் ஸ்டார்ட் பண்றது இல்லையா?
**கார்த்திகா:**
பொறுமையா இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ணலாம், அவசரப்பட்டா நான் கேமுக்கு வர மாட்டேன்...
**மதன்:**
அலோ, நானும் ப்ராக்டீஸ் இல்லாமத்தான் ஃபீல்டுல இறங்கியிருக்கேன்...
**கார்த்திகா:**
நாம விளையாடும் போது தெரிஞ்சிடும் யாரு அதிகமா பாத்திருக்காங்கன்னு, பாப்போம்
**(கார்த்திகா வெட்கத்துடன் மதனின் தோளில் குத்துகிறாள்)**
**(கார்த்திகா பாடுகிறாள் - 1966 வல்லவன் ஒருவன் பாட்டு)**
**கார்த்திகா:**
இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது இந்த பார்வைக்கு தானா பெண்ணானது நான் கேட்டதைத் தருவாய் இன்றாவது
**மதன்:**
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது இந்தக் கேள்விக்குத்தானா பெண்ணானது நெஞ்சை கோட்டையைத் திறப்பாய் இன்றாவது
**கார்த்திகா:**
இந்தப் பாட்டு உங்களுக்கும் தெரியுமா?
**மதன்:**
இந்தப் பாட்ட ஜெர்மன்லயா போய்க் கேட்டுட்டு வந்த? தமிழ் சினிமாவோட 1960 ஸ் கிளாசிக்ஸ்
**(இருவரும் புன்னகைக்கின்றனர்)**
**கார்த்திகா:**
விண்டோவ மூடிட்டு வாங்க, அந்த மூணாவத ப்ரொட்யூஸ் பண்ண கேம் ஸ்டார்ட் பண்ணலாம்
**மதன்:**
இப்பவாச்சும் தோனுச்சே? இதோ வரேண்டி செல்லக்குட்டி
**(மதன் ஜன்னலை மூடி விளக்கை அணைக்கிறான்)**
---
**முற்றும்.**
கருத்துகள்
கருத்துரையிடுக