இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கை வெற்றி பெறவில்லை"







"இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட

 பணமதிப்புநீக்க நடவடிக்கை வெற்றி

 பெறவில்லை"





நேர்காணல்: ரகுராம்ராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
தமிழில்: .அன்பரசு

இந்தியாவின் 23 ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநராக(2013-16) பணியாற்றிய ரகுராம்ராஜன், தற்போது சிகாகோ பிஸினஸ் பள்ளியின் நிதித்துறை பேராசிரியர். IMF இன் முன்னாள் பொருளாதார தலைவரான ரகுராம் ராஜன், I Do What I Do: On Reforms,Rhetoric and Resolve  என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

நம்பிக்கை அளிக்கிறது. ஜிஎஸ்டி சீரமைப்பை அரசியல் தடைகளை தாண்டி அமல்படுத்தியதால் வரி ஏய்ப்பு குறைந்து நாட்டினை ஒரே சந்தையாக அமைப்பது பெரிய விஷயம். ரியல்எஸ்டேட் மசோதா, ஜிஎஸ்டி, தொழில்முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு, தனியார் முதலீடு ஆகியவை அதிகரிக்கும். ஆனால் இவை சரிவர நிகழவில்லை. வங்கிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்த்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். இந்தியாவின் பிரச்னையே, அடுத்த என்ன செய்வது என்று தெரியாததுதான். சீரமைப்பு செயல்பாடுகள் நடைபெறுவது இந்த வரிசையில்தான்.

ரிசர்வ் வங்கியிடம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 99% நிதி சேர்ந்துள்ளது என்கிறது அரசு. பணமதிப்பு நீக்கம் பற்றிய நூலில் நீங்கள் என்ன கருத்தை கூறியுள்ளீர்கள்?

பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்தும்முன் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் உள்ளன. பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்படும் செலவு. ஜிடிபியால் 2% பாதிப்பினால் 2.5 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும். இதோடு மக்களின் சிரமங்கள். அடுத்து ஆர்பிஐ பணத்தை அச்சடிப்பது விநியோகிப்பது என 8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. 99% பணம் பெறப்பட்டுள்ளது என்றாலும் அதில் கருப்புபணம் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே மக்கள் தெருவில் நின்று தடுமாறிய கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். எலக்ட்ரானிக் பரிமாற்றம் என்பது இம்முறையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வரி முதலீடு 10 ஆயிரம் கோடி என்றாலும், கருப்பு பணம், வரி, ஆகியவை தெளிவாக கூறப்படாதபோது பணமதிப்பு நீக்க நடவடிக்கையை காலம் மட்டுமே வெற்றியா, தோல்வியா என கூறமுடியும்.

பணமதிப்புநீக்க நடவடிக்கை கிராமத்தை கடுமையாக பாதித்துள்ளதற்கு காரணம், அது வேகமாக அமல்படுத்தப்பட்டதுதான் என்கிறீர்களா?

நாட்டில் 87% சர்க்குலேசன் ஆகும் பணத்தை திடீரென கையகப்படுத்தினால் என்னாகும்? விளைவு மக்கள் தெருவில் பரிதாபமாக செல்லாக்காசோடு அலைபாய்ந்தனர்.ஜிடிபி குறித்த ஆய்வை செய்து பணமதிப்பை அமல்படுத்தியிருக்கலாம். பணமதிப்பு திட்டங்கள் அனைத்தும் வெற்றியடைய வாய்ப்பில்லை. முதலில் பணத்தை அச்சிட்டு, பணமதிப்பு நீக்கத்தை செய்திருந்தால் மக்களுக்கு நேர்ந்த பாதிப்பை குறைத்திருக்க முடியும்.

அப்படியானால் ஆர்பிஐக்கு பணமதிப்பு நீக்கம் பற்றிய ஐடியாவே இல்லை என்கிறீர்களா?

செப். 2016 அன்று ஆர்பிஐ ஆளுநர் பதவியிலிருந்து விலகும்வரை பணமதிப்புநீக்கம் பற்றிய எந்த கருத்துக்களும் எங்கள் உறுப்பினர்களிடையே விவாதிக்கப்படவில்லை.

காங்கிரஸ், பிஜேபி என இரு அரசுகளிடையே  கவர்னராக பணியாற்றியுள்ளீர்கள். எந்த அரசு உறுதியான முடிவுகளை எடுக்கும் அரசாக கருதுகிறீர்கள்?

அரசுகளைப்பற்றி பேசுவது அவர்கள் என்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம். இரு அரசுகளிடமே எனக்கு நல்லுறவு இருந்தது.

வட்டிவீதத்தை குறைவாக வைத்திருப்பது பற்றிய தீவிரத்தை உங்களுடைய பதவிக்காலத்தில் கொண்டிருந்தீர்கள். தற்போதும் அது தொடர்கிறதே?

 ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த டென்ஷன் உண்டு. ஆர்பிஐ நிதியமைச்சகத்தோடு இணைந்து வட்டி சதவிகிதத்தை  முடிவு செய்வது வாடிக்கை.

நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா தன் பதவியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்தவர்களை முக்கிய பதவிக்கு நியமிக்கவேண்டும் என குரல் எழுந்துள்ளதே?

நாட்டில் இருப்பவர்களை நாட்டிற்கு வெளியே உள்ளவர்களுக்கு தேசபக்தி அதிகம். இல்லையெனில், ஏன் இந்தியாவுக்கு பணியாற்ற வரப்போகிறார்கள்? நான் பணியின்போது எடுத்த பல்வேறு முடிவுகள் அதிகாரிகள் ஒவ்வொருவரின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானகரமாக எடுக்கப்பட்டவையே. உண்மையில் நான் பதவியிலிருந்து விலகும்போது, சிகாகோ கல்லூரி விடுமுறை நீட்டிக்காது என்ற நிலையில், அரசு என்னை பதவியில் நீட்டிக்க விரும்பாது என்ற எண்ணத்தை நான் எட்டியிருந்தேன் என்பதே உண்மை

நன்றி: சித்தார்த்தா, சுரோஜித் குப்தா, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
.


  




  

பிரபலமான இடுகைகள்