நண்பேன்டா நாடு!
நண்பேண்டா நாடு!
உடனே கனடா என்று சொல்லி கோல்டன்
டக் ஆகாதீர்கள். இன்டர்நேஷன்ஸ் எக்ஸ்பாட் இன்சைடர் 2016 படி தைவான், உகாண்டா, கோஸ்டாரிகா
முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளது.
மோசமான நாட்டில் குவைத் டாப்பாக உள்ளது.
67 நாடுகளிலுள்ள 14 ஆயிரம் மக்களிடம்
பேசி இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. “எப்போதும் குளிராக அல்லது மழையாக இருந்தால் மக்கள்
வெளியே செல்ல முடியாது” என்கிறார் இன்டர்நேஷன்ஸ் இயக்குநர் மால்டே ஸீக். சுற்றுலாப்
பயணிகளை வரவேற்று உபசரிப்பதில் தைவான் மக்கள் 65 மார்க்குகளை பெற்றுள்ளனர். “விருந்தினர்களை
கண்ணியத்துடன் நடத்துவது எங்கள் கலாசாரம்” என்கிறார் சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தைவான்
சுற்றுலாத்துறை தலைவர் லிண்டா லின்.
கண்ணியமான
மரியாதையுடன் பழகும் சுற்றுவாவாசிகள் ஜப்பானியர்கள் எனவும், அருவருப்பான முறையில்
அமெரிக்கர்கள் நடந்துகொள்வதாகவும் இன்டர்நேஷன்ஸ் அறிக்கையில் தகவல்கள் பதிவாகியுள்ளன.