தீராத காதல்!




Image result for rx 100






காதல்போராட்டம்!

2015 ஆம் ஆண்டு சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுண்ட் எஞ்சினியரான இப்ராகிம் சித்திக், ஒரு நிகழ்வில் கல்லூரி மாணவியான அஞ்சலியை சந்தித்தார். கண்டதும் காதல் நெருப்பு பற்ற, சித்திக் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற உண்மையைக் கூட புறந்தள்ளிவிட்டார் அஞ்சலி. ஆனால் அவரது பாரம்பரிய பெற்றோருக்கு இது கசப்பாக மாற, அஞ்சலியை சித்திக்குடன் வாழ அனுமதிக்கவில்லை.

“நான் ஜெயின் சமூகத்தினரான அஞ்சலிக்காக இஸ்லாமிலிருந்து இந்துவாக மாறினேன். 2016 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் ஆர்ய சமாஜ கோவிலில் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. அஞ்சலியை மதம் மாறச்சொல்லும் குற்றச்சாட்டு பொய்”  என உயர்நீதிமன்றத்தில் சித்திக் மன்றாடியும் பயனில்லை. அஞ்சலிக்கு நீதிமன்றம் அளித்தது இரண்டே வாய்ப்புகள்தான். பெற்றோர்களுடன் வாழ்வது, பிலாஸ்பூரிலுள்ள அரசு கல்லூரி விடுதியில் தங்குவது. இதனை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் சித்திக்.

“சித்திக் மதம் மாறியதாக கூறினாலும் அரசு ஆவணங்களில் அவரது பெயர் மாற்றப்படவில்லை. மேலும் அவருக்கு வயது 33. அஞ்சலிக்கு 23 தான் ஆகிறது. சித்திக்கின் முந்தைய திருமணம் குறித்தும் அவர் மறைத்துவிட்டார்” என குற்றச்சாட்டை அடுக்குகிறார் அஞ்சலியின் மாமா தீபக். காதல்போராட்டத்தால் மருத்துவமனை சிகிச்சையிலுள்ளார் அஞ்சலி.