எஸ்.ஏ.டாங்கே
எஸ்.ஏ. டாங்கே (1899-1991)
பால்யத்தில் சிவாஜி, திலகரின் மீது பெரும் மரியாதையும் பக்தியும் கொண்ட டாங்கே, தொழிற்சாலை சங்கத்தின் மூலமாக குறிப்பிடத்தக்க கம்யூனிச தலைவராக உருவானவர்.
அகமதுநகரிலுள்ள இந்து குடும்பத்தின் வாரிசாக பிறந்த டாங்கே ஆங்கிலேயர்களை எதிர்த்து கைதாகி(1908-1910) சிறை சென்ற சாவர்கர் சகோதரர்களை தன் கண்ணால் பார்த்து உத்வேகம் கொண்டவர். சுவாமி ராம் தீர்த்தா, திலகர் ஆகியோரை பின்தொடர்ந்து கீதா ரகசியம் நூலை வாசித்தவர், முதலாளித்துவத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் ஆன்மிகத்தை கழற்றி எறியவில்லை. "ஆன்மிக தத்துவம் போராட்டத்திலும் எனக்குள் இருந்தது" என்று டாங்கே ஒருமுறை கூறியுள்ளார்.
கார்ல் மார்க்சின் கொள்கைகள் லாஜிக், கரெக்ட், பிராக்டிக்கல் என்பவர் இறுதியில் யாருக்கும் யாரும் நமக்கு எதையும் கற்றுத்தந்து விட முடியாது என்பதில் வந்து நின்றார். ஹரிநாராயன் ஆப்தே, ராம் கணேஷ் கட்கரி ஆகியோரின் மராத்தி நாவல்களை தீவிரமாக வாசித்த டாங்கே, இந்தியாவைச் சேர்ந்த வி.ஜே. கரந்திகருக்கு அடுத்து பி.பி.ஷெல்லி கவிதைகளை வாசித்து மகிழ்ந்தார். 1920 ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தில் அன்னிபெசன்ட் இயக்கத்தின் கூட்டங்களில் பங்கெடுத்தவர், காந்தி Vs லெனின் என்ற நூலை எழுதி சுயமாக பதிப்பித்து வெளியிட்டார்.
காந்தியின் செயல்பாடுகளில் பெரிய நம்பிக்கை கொண்டவரல்ல டாங்கே. துருக்கியின் மதத்தன்மை காந்தியால் சிதைந்துபோனது டாங்கேவை கவலையில் ஆழ்த்தியது. காந்தி முஸ்லீம்களை இணைத்து தேசிய இயக்கத்தில் ஈடுபடுத்தியது வெற்றியடையாதது என டாங்கே நினைத்தார். அத்தனை அரசியல் பரபரப்பிலும் ஹெச்.ஜி. வெல்ஸ், ட்ராட்ஸ்கி, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஆகியோரின நூல்களை வாசித்து வந்தார் டாங்கே. ஜோஷி, ஜோக்லெகர், நிம்ப்கர் உள்ளிட்ட உயர்சாதி இந்து பெயர்களை வெளிநாட்டினர் என்றே பொதுவாக கருதி வந்தனர்.
காந்தியின் கொள்கைகளை எதிர்த்தாலும் அவரின் மீது மக்கள் கொண்ட வசீகரத்தை டாங்கே கவனித்தார். காந்தியின் மீதான மரியாதை அவர் வாழ்வின் இறுதிவரை அவர் கூடவே இருந்தது. சுதந்திரம் , சர்வதேசியம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை திரிமந்திரங்களாக உச்சரித்து வாழ்ந்தவர் டாங்கே.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: பவுன்டைன் இங்க்