பரிணாம வளர்ச்சி சிலருக்கு மட்டும் துரிதமாகிறதா?
பரிணாம வளர்ச்சி அதிசயம்!
மனிதர்கள் தொடர்ச்சியாக பரிணாமவளர்ச்சி
அடைவதும், விலங்கினங்கள் பெரியளவ மாறுதல்களை அடையாதிருப்பதும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல
மனிதர்களுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இயற்கையில் சிலவகை உயிரிகளுக்கு
மட்டுமே பரிணாம வளர்ச்சி உண்டு என சிலர் தவறாக புரிந்துகொள்கின்றனர்.
மனித மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம்
காரணமாக வாழ்நாள் குறைந்துள்ளது புதிய மாற்றம். மனிதர்களின் அறிவுப்பற்கள், நீலநிற
கண்கள், லாக்டோஸ் சகிப்புத்தன்மை ஆகியவை பரிணாம வளர்ச்சியின் விளைவுகளே.
காசநோய் பலரையும் தாக்கும் சூழலில் சிலருக்கு பாதிப்பு
நேராததற்கு காரணம் அந்நோய்கிருமிகளை அழிக்கும் திறனை சில மனிதர்களின் உடல் கொண்டிருப்பதுதான்.
ஆனால் அவர்கள் வேறு சூழலுக்கு மாறும்போது அல்லது மருந்துகள் மூலம் காசநோய் கட்டுப்படுத்தப்படும்போத
காசநோய் எதிர்ப்பு சக்தி தானாகவே மறைந்துவிடும். ஆனால் இதற்கு அவர்கள் பரிணாமவளர்ச்சி
அதிகம் பெற்றுள்ளனர் என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட உயிரின் பரிணாம வளர்ச்சி என்பது
இயற்கையின் சூழல் தூண்டுதலால் நிகழ்வதேயாகும்.