பாம்பு கடித்தவரை காப்பாற்றுவது எப்படி?
பாம்பு விஷத்தை நீக்குவது எப்படி?
பாம்பு உங்களை கடித்துவிட்டது.
உடனே என்ன செய்வீர்கள்? உடனே கடிவாயை பிளேடால் அறுத்து ரத்தத்தை உறிஞ்சி துப்பும் சூப்பர்மேன்தனம்
பலருக்கும் நினைவில் வந்துபோகும். ஆனால் இது பாம்பு கடித்தவருக்கு பாம்பின் விஷத்தோடு
கூடுதலாக தொற்றுநோய் பிரச்னையை மட்டுமே தரும்.
உலகெங்கும் 5.4 மில்லியன் மக்கள்
பாம்பினால் கடிபடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. இதில் 81 ஆயிரம்
பேரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காஃபி, டீ ஆற்றிக்கொடுக்காமல், வலிநிவாரணியை
விழுங்கச்சொல்லி தொந்தரவு கொடுக்காமல் கடிவாயில் துணியை இறுக்கமாக கட்டி மருத்துவமனையில்
சேர்ப்பதே ஒரே உயிர்காக்கும் வழி. பாம்புகளை அடையாளம் காட்ட நீள்வட்டம், வட்டம் என
அதன் விழிகளை அடையாளம் சொன்னால் போதும்.
மேலும் விஷமுள்ள பாம்புகளும் மனிதர்களை எச்சரிக்க
25% விஷமற்ற வெற்றுகடிகளை கடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துளது. விழுங்கமுடியாத இரைக்கு
மதிப்புமிக்க விஷத்தை பாம்புகள் பயன்படுத்துவதை பெருமளவு தவிர்க்கின்றன என்பதே உண்மை.