RX100 - காதலை வீழ்த்தும் துரோகத்தின் கவண்வில்!

Related image

RX100


காதல் பெருந்தீ அணையாது!

கோதாவரி கிராமத்தில் வாழும் தியேட்டர் ஒனரின் மகன் சிவா. பெற்றோர்கள் இறந்துவிட டாடி எனும் ராம்கியை நம்பி வாழ்பவன் வெறுப்பையும் அன்பையும் வெளிக்காட்டுவதில் நெருப்பு போன்றவன். சிவாவின் பைக்கான யமஹா ஆர்எக்ஸ் 100  டூ ஸ்ட்ரோக் சீற்றம்தான் நாயகனின் குணம் கூட. 

சிகரெட், மது என அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவர்களை விட பவ்யமாக திரிபவனை மாற்றுவது ராவ் ரமேஷின் மகளான நகரத்து பெண் இந்து. லீவுக்கு கிராமத்திற்கு வருபவள் முதல் காட்சியிலேயே சிவாவின் சிக்ஸ்பேக்(சினிமா மேஜிக்) உடம்பில் மட்டையாகிறாள். லவ் டேக் ஆஃப் ஆச்சா? மஞ்சள் கயிறை கட்டிவிடலாமா என யோசிக்கும் கிராமத்தான் சிவாவிடம் காரியம் நடக்க  காதல் நாடகமாடி செக்ஸை நிலம், நீரில் திகட்ட திகட்ட அனுபவிக்கிறாள். உற்சாகமாக சிவா எடுக்கும் செல்ஃபிக்களை கவனமாக அழித்து விடுகிறாள். 

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்புவதுபோல இந்துவின் அன்பை பச்சை மண்ணாக காதல் என நம்புவனுக்கு அவன் சாகும்வரை தான் ஒரு செக்ஸ் பொம்மை என தெரியாமல் போகிறது. தேவையான விஷயம் முடிந்ததும்
அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொண்ட செட்டிலாகிறாள் இந்து. இந்துவின் பெற்றோர் எதிர்ப்பினால் அவள் தன்னை மணம் செய்துகொள்ளவில்லை என நம்பும் சிவா, மூன்று ஆண்டுகள் தவிப்புடன் வாழ்கிறான். 

இறுதியில் இந்து வந்ததும் என்னாகிறது? சிவாவின் நிலைமை என்ன? ஊரை விட்டு போகச்சொல்லும் ராம்கி ஏன் அப்படி கூறுகிறார்?  என்பதற்கு அஜய்பூபதி ஜிலுஜிலு செல்லுலாய்ட்டில் பதில் சொல்லுகிறார். 

கார்த்திகேயா சிவா கேரக்டரில் முடிந்தவரை நேர்மையாக நடித்திருக்கிறார். பாயல் ராஜ்புத், முதல்படத்திலேயே தன்னால் எந்தளவு முடியும் என நிரூபித்தி காட்டியிருக்கிறார். முத்தக்காட்சிகள் திரையில் மட்டுமல்ல பார்க்கும் நம் நெஞ்சிலும் காமக்கனலை கொட்டுகிறது. இறுதியில் அவரின் மறுமுகம் ராம்கி மூலம் தெரியவரும்போது எரிமலை பெருகுகிறது. 

மாசாணி, பிரியாணி படங்களில் துண்டு துக்கடா கேரக்டர்களில்  ரீஎன்ட்ரி கொடுத்த ராம்கிக்கு தெலுங்குப்படம் சிவப்பு கம்பளம். அதிலும் இளமைக்காதலை சொல்லும்போது வெட்கப்படும் இடம் ஆசம். ஆனால் காதல் ட்ராக்கை விட்டு கதை இறங்க கூடாது டைரக்டர் எடிட்டர் கே எல் பிரவீனை கண்டித்திருப்பார் போல. அந்த இடையீடான கதையும் அந்த சீனோடு முடிந்துபோகிறது. 

பாடல் இசையில் பிள்ளா ரா மீண்டும் கேட்கலாம். கிராமத்திலுள்ள அத்தனை அழகான இடங்களையும் ஷெட்யூல் போட்டு படம்பிடித்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். காதலின் துரோகத்தை சொல்ல முயன்றவர்கள்  சிவாவுக்கு அப்படி பிரியம் பூக்க என்ன காரணம் என கூறவேயில்லை.  ஒரே டிராக்காக செல்லும் கதை சூடுபிடிப்பது இறுதிக்காட்சியில்தான். அதுவும் இந்து என்ன செய்வாள் என எல்கேஜி படிக்கும் பையன் கூட சொல்லிவிடும் நிலையில் பிளாஷ்பேக் காட்சிகளில் அதில் புதுமை ஏதுமில்லை. 



-கோமாளிமேடை டீம்

நன்றி: பாலாஜி மாதவ்



திரைப்பட விவரங்கள்!

Directed byAjay Bhupathi
Produced byAshok Reddy Gummakonda
Written byAjay Bhupathi
Starring
Kartikeya Gummakonda
Music by
Chaitan Bharadwaj (songs)
Smaran (background)
Release date
Running time
153 minutes
CountryIndia
LanguageTelugu
Budget₹1.5 crore (US$220,000)
Box office₹31 crore (US$4.5 million)

பிரபலமான இடுகைகள்