இந்தியாவின் முதல் இந்து கோர்ட்!
காந்தியை கொன்றிருப்பேன்!
உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள
முதல் இந்து நீதிமன்றத்தில் பேராசிரியை, “கோட்சேவுக்கு முன்பாக நான் பிறந்திருந்தால்
காந்தியை கொன்றிருப்பேன்” என பேசி திகிலூட்டியுள்ளார்.
அண்மையில் உ.பியின் மீரட் நகரில்
இந்து மகாசபா(AIHM), சார்பில் முதல் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் நீதிபதியாக
கணித பேராசிரியை பூஜா சாகுன் பாண்டே என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார். இவ்விழாவில்
“இந்திய- பாகிஸ்தான் பிரிவினையை தூண்டி இந்துக்களை பலிவாங்கிய காந்தியை கோட்சேவுக்கும்
முன்பாக பிறந்திருந்தால் நானே கொன்றிருப்பேன்” என தடாலடியாக பேசிய கூட்டத்தின் அசல்
தேசபக்தர்களிடம் கைதட்டல்களை பெற்றுள்ளார். மேலும் தேசத்தந்தை என்ற பட்டத்தையும் காந்தியிடமிருந்து
பறிக்கவேண்டும் என்பதும் பேராசிரியை பூஜாவின் ஆவேச கோரிக்கை. அமைப்பிலுள்ள உறுப்பினர்களின்
பிரச்னைகளை சுமூகமாக செட்டில் செய்வதற்கான அமைப்பே இந்த நீதிமன்றமாம். எல்லை மீறும்
சாதிப்பஞ்சாயத்து!