சுந்தரய்யா(1913-1985)
சுந்தரய்யா(1913-1985)
கம்யூனிச தத்துவத்தில் பின்னர் ஈர்க்கப்பட்டாலும் முதலில் தெலுங்கு இலக்கியத்தில் தீர்க்கமாக இணைந்திருந்தார். இலக்கியம், வரலாறு, பாடல் என அனைத்திலும் ஆர்வமாக ஈடுபட்ட ஆளுமை சுந்தரய்யா. "உங்கள் நாட்டை ஆக்கிரமிக்க வருவபவர்களை எதிர்த்து போரிட வேண்டும்" என்று கூறிய சுந்தரய்யா, வாமன அவதாரத்தின் மீது வசீகரிக்கப்பட்டார். அதுமட்டுமில்லாது ராமாயணம், மகாபாரதம் மீது பெரும் பித்து இவருக்கு இருந்தது. வரலாற்று வீரர்களான ராணா பிரதாப், சிவாஜி, கிருஷ்ணதேவ ராயர், ராம்மோகன் ராய், விவேகானந்தர், சி.ஆர். தாஸ், காந்தி, ராம் தீர்த்தா, திலகர் என அத்தனை பேரையும் தனக்கான முன்மாதிரி மனிதர்களான கருதினார்.
சைமன் கமிஷனை எதிர்த்து 1928 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கம்யூனிஸ்ட் அறிக்கை 1929 ஆம் ஆண்டு வெளியாக சோஷலிஸ்ட்டாக மாறினார். இவரை பெருமளவு ஏழை மக்கள் மீதான கொள்கை பிடிப்பாளராக மாற்றியது அமிர் தாதர் கான். "கருத்தியலை ஏற்ற மக்களை நாம் கட்சியில் சேர்த்து பணியாற்றவேண்டும் " என்று பேசியவர். தன் வாழ்நாளின் இறுதிவரை காந்தியின் எளிமையும், மக்களுக்கான போராட்டத்தையும் நம்பினார்.