ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

 

 


 

 

 

 

 

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!


கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று, சிவ்பால் சிங், தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார். விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால், மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது.


இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங், ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார். மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார்.


இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும், இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும். ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால் சிங். இவர் உருவாக்கி தொழில்நுட்பம் மூலம் ஆம்புலன்ஸ் சேவை 55 நிமிடங்களிலிருந்து முன்னேறி 18 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. இதனால் 160 ஆக இருந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 600ஆக உயர்த்த அனுமதியை டில்லி அரசு வழங்கியுள்ளது.


https://www.newindianexpress.com/good-news/2021/jan/18/moved-by-sons-death-delhi-road-safety-trainer-works-to-reduce-ambulance-response-time-2251565.html





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்