சூனியக்காரி என்று தூற்றப்பட்ட பெண்களின் உயிரைக் காப்பாற்றிய அசாதாரணப் பெண்மணி!

 

 

 

 



 

 

 

 

உயிர்களைக் காப்பாற்றிய மனுஷி!


அசாமில் வாழும் மக்களின் மூடநம்பிக்கையால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றி அதன் காரணமாகவே பத்ம விருதைப் பெற்றுள்ளார் பிருபாலா ராபா. இவர் 2010ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் நேர்காணல் ஒன்றை கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென படகு கவிழ்ந்துவிட ஆற்று நீரில் விழுந்துவிட்டார். ஆனால் அந்த அனுபவம் நடந்து பத்தாண்டுகள் ஆகின்றன. ''இப்போது, அந்த சம்பவம் நினைத்தால் வித்தியாசமாக இருக்கிறது. என்னுடைய ஆயுள் முடிந்துவிட்டது. நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் அப்போது எனக்கு தெரிந்த உண்மை இறப்பிற்காக நான் வருத்தப்படவில்லை என்பதுதான். அதனால்தான் இன்றும் உங்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்'’ என்றார் ராபா.


கோல்பாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபா. இவர் மூடநம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று கருதப்பட்டு கொல்லப்படும் பெண்களைக் காப்பாற்றி வருகிறார். அதற்காக இவருக்கு உயிருக்கு ஆபத்தும் வராமலில்லை. ''எனக்கு கொடுக்கப்பட்ட விருது பிற விஷயங்களை விட சிறப்பானதுதான். ஆனால் இதுபற்றி ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் சக மனிதர்களுக்கு மனிதர்களே உதவ தடையாக இருப்பதுதான் இந்த பிரச்னையில் விநோதமாக இருக்கிறது'’ என்றார்.


ராபா உயிரை தானாக விடும் நேரத்திலும் கூட துணிந்து பிழைத்துக்கொண்டவர், பிறருக்காக தன்னையும் கூட அர்ப்பணிக்காக தயாராக இருந்தார். இதனால்தான் இரவில் கூட மேகாலயாவிலுள்ள கிராமங்களிலிருந்து பெண்களிடமிருந்து அழைப்பு வந்தால் அவர்களைக் காக்க பயப்படாமல் செல்ல முடிகிறது. அங்கு ஊர் மக்கள் ஒரு பெண்ணை சூனியக்காரி என்று சொல்லி கொல்வதற்கு வாள்களோடும், தடிகளோடும் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பொதுவாக பேசி சூனியக்காரி என்பதும், சூனியம் என்பது கிடையாது என்று சொல்லி அவர்களின் மனதை மாற்றி பெண்ணை காப்பாற்றியிருக்கிறார்.


அடுத்தநாள் ராபாவுக்கு இனிமையாக விடியவில்லை. ஊர் மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு விட்டனர். ராபா கிராமத்து பெண்ணை சூனியக்காரி இல்லை என்று சொன்னது தவறு என்று எழுதி தருமாறு கிராமத்தினர் நெருக்கடி தந்தனர். ஆனால் ராபா அதற்கெல்லாம் மசியவில்லை. இதனால் அவரையும் சூனியக்காரி என கிராம மக்கள் முத்திரை குத்தி விட்டனர். ஆனாலும் கூட மகிளா சமிதியில் வேலை பார்த்தபடி சூனியக்காரி என்று குற்றம்சாட்டுபவர்களை இவரும் இவரது குழுவினரும் காப்பாற்றத் தவறவில்லை.


ராபாவின் ஈடுபாட்டிற்கு சொந்த காரணங்களும் இல்லாமல் இல்லை. அவரது மகன் மனநல பிரச்னையால் 1985ஆம்ஆண்டு பாதிக்கப்பட்டார். இதற்கு உள்ளூர் பூசாரிகள் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பூஜை செய்தனர். ஆனால் ராபாவின் மகன் மூன்று நாட்களிலேயே இறந்துபோய்விட்டார். அப்போது ராபாவுக்கு பேய், பிசாசு மீது நம்பிக்கை இருந்தது. பின்னர், அந்த நம்பிக்கையை பிறரிடமிருந்து ஒழிக்க பாடுபடத் தொடங்கி நூற்றுக்கணக்கான பெண்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.


இந்த காலத்திலும் சூனியக்காரி என்று சொல்லி பெண்களை கொல்லுவார்களா என்று இதைப்படிக்கும்போது நினைப்பீர்கள். உண்மையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், ஆண்களைக் கூட இப்படி குற்றம் சாட்டி கொலை செய்துவிடும் வழக்கம் இயல்பாக உள்ளது. பின்னணியை ஆராய்ந்தால் பொறாமை, சொத்துக்களை அபகரிப்பது, குடும்ப பெருமை ஆகியவை இதன் காரணமாக உள்ளது. 2015இல் இதுபோன்ற குற்றங்களை தடுக்க அசாம் அரசு சட்டத்தை உருவாக்கியது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம் செயலுக்கு வந்தது 2018இல்தான். பிருபாலா ராபாவின் பெயரில் மிஷன் பிருபாலா என்ற அமைப்பு தொடங்கப்பட்டபிறகுதான் சூனியக்காரி எனும் பெயரில் நடைபெறும் சமூக அநீதி கட்டுப்படுத்தப்பட்டது.


ஜார்க்கண்ட், ஒடிஷா, பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த மாநிலங்களில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுவதற்கு காரணம் கல்வியில் போதாமை, மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படாமை, விழிப்புணர்வு இல்லாமை ஆகியவைதான். இவருடன் பல்வேறு பெண்களும் சேர்ந்து ஆற்றில் குதித்து நீந்தி ஓடி சுடுகாட்டில் காத்திருந்து பெண்களை மீட்டு வந்து உள்ளனர். இத்தனைக்கும் ராபா பேசும் மக்கள் அனைவருமே அவரைக் கொல்வதற்கான முனைப்பில் கத்தி, தடிகளை தயாராக வைத்துக்கொண்டு இருப்பவர்கள்தான்.


இந்த சமூகப்பணிகளுக்கு இடையில் ஸ்கார்பை பின்னுகிறார். கோழிகளுக்கு தீவனம் வைக்கிறார். வீட்டுக்கு நீர் பிடித்து வைக்கும் வேலைகளையும் செய்கிறார். அனைத்துக்கும் திடீரென இடைவெளி விடுவது அவரது போன்களுக்கு வரும் பெண்களின் அழைப்புகள்தான். வந்ததும் அவரது சிறிய உடலில் மின்சாரம் பாய்ந்தது போல பரபரப்பு எழ வேகமாக எழுந்து ஓடுகிறார். உண்மையிலேயே மேகங்கள் அல்ல பறவைகளால்தான் அழகாகிறது வானம் அல்லவா?


இந்தியன் எக்ஸ்பிரஸ்


டோரா அகர்வாலா




கருத்துகள்