வட இந்திய தொழிலாளர்களுக்கு உதவிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன்!
டாக்டர் விஜய் கார்த்திகேயன்
திருப்பூர்
ஏராளமான வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நகரமாக திருப்பூர் மாறியுள்ளது. இதனால் அங்கு பொதுமுடக்கத்தின்போது தேவையான உதவிகளை கவனமாக வழங்கும் தேவை இருந்தது. இதனை கச்சிதமாக நிறைவேற்றினார் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன்.
விஜய் கார்த்திகேயன் மருத்துவராக இருந்து குடிமைப்பணித்தேர்வு எழுதி ஆட்சியரானரர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து பல்வேறு உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். இவர் மட்டுமே 62,744 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்றைத் தொடங்கி அதில் பல்வேறு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதன்மூலம் தேவைப்படும் உதவிகளை களத்தில் வழங்க மட்டுமே நகரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தயாராக இருந்தனர் என்பது விஜய்யின் திட்டமிடலுக்கு சரியான உதாரணமாக இருக்கும். திருப்பூர் கொரோனா போராளிகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிப்புற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு அரசு அதிகாரிகளும், தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
விஜய் 755 ரூபாய் மதிப்புள்ள ரேஷன் கிட் ஒன்றை பிறரிடமிருந்து பெற்று தேவைப்படும் மக்களுக்கு வழங்கினார். இது தவிர மாநில அரசும் மானிய உதவிகளை மக்களுக்கு வழங்கியது.
https://www.thebetterindia.com/223262/covid19-fundraiser-civil-servants-ias-irs-officers-migrant-workers-lockdown-say143/
கருத்துகள்
கருத்துரையிடுக