சொந்த சேமிப்பைக் கரைத்து கிராம மக்களுக்கு சோறிட்ட ராஜஸ்தான் தம்பதி!

 

 

 

 

 

 


 

 

 

சேமிப்பைக் கரைத்து மக்களுக்கு சோறிட்ட விவசாயத் தம்பதி!


கடந்த ஆண்டு மார்ச் 24இல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது அரசு கூட கண்டுகொள்ளாத விஷயம், வேலையில்லாத நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்பதே. இதைத்தான் டில்லியிலுள்ள உதவி வருமானவரித்துறை கமிஷனர் பாகிரத் மண்டாவும் யோசித்தார். ராஜஸ்தானில் வாழும் அவரது பெற்றோர் இதற்கு உதவ செயலில் இறங்கிவிட்டனர். அங்குள்ள 80 கிராமங்களில் உணவு தானியங்களை சொந்த சேமிப்பைக் கரைத்து வழங்கியுள்ளனர்.


கோவிட் -19 நிலையில் பல்வேறு குடும்பத்தில் வறுமை நிலை மெல்ல உருவானது. பல்வேறு சிறு, குறு தொழிலகங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது. நகர்ப்புறங்களுக்கு நிகராக கிராமங்களிலும் வறுமை நிலை ஏற்பட்டது. இதனால் பாகிரத் மண்டாவின் பெற்றோர் பாபுராம் மண்டா, முன்னி தேவி ஆகியோர் கிராமங்களில் கடுமையான வறுமையில் உழன்ற ஆறாயிரம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அளவு கோதுமை, பருப்பு, மளிகை சாமானகளை உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் கொடுத்து உதவியுள்ளனர்.


கிராமங்களில் இதற்கான மையங்களை அமைத்து அங்கு வரும் மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். அப்படி வரமுடியாதவர்களின் முகவரிகளைப் பெற்று வீடுகளுக்கும் மளிகைப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த உதவிகளை வழங்கிய பாபுராம், முன்னிதேவி ஆகிய தனது பெற்றோர் பற்றி எழுதுவது தனக்கு முதலில் விருப்பமில்லை. என்ற பாகிரத் பின்னர் பொதுநன்மை கருதி அதனை ஏற்றிருக்கிறார். ''நான் இப்படி என் பெற்றோர் செய்த உதவிகளை சொல்லும்போது, பிறருக்கும் அது ஊக்கம் தரும். அவர்களும் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன்'’ என்றார்.



https://www.thebetterindia.com/223445/delhi-irs-officer-farmer-couple-spend-life-savings-feed-poor-covid19-families-coronavirus-lockdown-say143/



கருத்துகள்