ஆண்டவன் அளிப்பதல்ல; நாம் வாழும் மோசமான சூழலால் உருவாவதே நோய்!


 

கிருமிகளின் ஆக்கிரமிப்பு


உடலுக்குள் எப்போதும் நுண்ணுயிரிகள் உண்டு. இவற்றில் முக்கியமானது வைரஸ், பாக்டீரியா. இதில் வைரஸ் ஆபத்தானது. பாக்டீரியாவும் நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வைரஸ் அளவுக்கு அல்ல. 


உடல் நுண்ணுயிரிகளை எப்போதும் வெளியேற்றவே முனைகிறது. ஆனால், வைரஸ், பாக்டீரியா எப்படியேனும் உள்ளே வந்துவிடுகிறது. 


உடலுக்கு நோய்க்கிருமி பற்றி பழக்கி, நோயைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. தடுப்பூசிகள் பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள், மருந்தின் செயல்பாடு ஆகியவை குறித்து வைக்கப்பட்டு பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்கிறார்கள். ஆனால் அவசரச் சூழலில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அதைப் பயன்படுத்துபவர்களுககும் ஆபத்தாக மாறுகிறது. 


சில போலி அறிவியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்பார்கள். தடுப்பூசியின் தொடக்க காலத்தில் பக்கவிளைவுகளை பெரிதுபடுத்தி பேசுவார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு அரசு செலுத்திய தடுப்பூசி காரணமாக பலருக்கும் நீரிழிவுநோய் வந்துவிட்டது என வதந்தி பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. நீங்கள் கொள்ளைநோய் பரவும்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டால், உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளலாம். அப்படி செய்யாதபோது உயிரிழப்பீர்கள். மருந்துகளின் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாதவை பதினொரு மாதங்களில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளை விட இருபது ஆண்டுகளாக ஆராய்ச்சியில் மேம்பாடு அடையும் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் குறைவு. 


உங்களுக்கு காலில் அடிபட்டுவிடுகிறது. அப்போது காயம் கன்றிப்போய்விடும் சூழலில், அதில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. முறையாக காயத்தை ஆல்கஹால் கலவை கொண்ட மருந்துக்கலவையால் சுத்தப்படுத்திவிட்டு மருந்து போடலாம். காயம் ஆழமாக இருந்தால் மருத்துவரின் சிகிச்சை, ஆலோசனை அவசியம்.


நுண்ணுயிரி அது வைரஸ் அல்லது பாக்டீரியாவாக இருக்கலாம். ஒருவரின் உடலுக்குள் சென்றால் உடனே பல்கிப் பெருகும். அதனால்தான் நோயின் அறிகுறிகள் நாட்பட அதிகரிக்கிறது. மருத்துவரிடம் நீங்கள் சென்றால், நோயை வெளியேற்ற மருந்துகளை அளிப்பார். 


நோய்க்கிருமிகளுக்கு எதிராக நம் உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன. 


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு ஏற்படும் நோய்களுக்கு கடவுளே காரணம், அவர்தான் செய்த பாவங்களுக்கு தண்டனை அளிக்கிறார் என்று கருதினார்கள். இதை கிரேக்க மருத்துவர் ஹிப்போ கிராடிஸ் ஏற்கவில்லை. ஒருவருக்கு ஏற்படும் நோய்களுக்கு, அவரின் சுற்றுப்புறம்தான் காரணம் என்று கூறினார். இவர்தான், நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 





image

pixabay

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!