2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!

 2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!


இந்தியா, மதவாத கட்சியின் ஆட்சியில் டாலருக்கு எதிராக ரூ.90 அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் ரூபாய் சற்றே சரிவை சந்தித்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலில் ஊளையிட்ட நடிகர்கள், மும்பை ஊழல் தொழிலதிபர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். தனக்கு வரவேண்டிய பதினைந்து கோடி ரூபாய், இன்னொரு செய்தியாளரிடம் சென்றுவிட்டதற்காக கோஸ்சாமி மட்டுமே ஆரவள்ளி மலைத்தொடர் சுரங்கம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ரூபாய் பற்றி இன்னும் யாரும் எதுவும் பேசவில்லை. பேசினால் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு ரெய்டு வரும். சோனம் வான்சுக் போல விசாரணையி்ன்றி சிறையில் வைக்கப்படுவார்கள். கிறித்தவர்கள் போல எரித்தே கொல்லப்படலாம். 


பஞ்சாபி பாப் ஸ்டார் கரன் ஆஜ்லா இந்தியாவுக்கு வருகிறார். இவரது இசைப்பயணத்திற்காக 1,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. 


உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 88,417. இது இதுவரையிலான நீதிமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை. நேர்மையாக செயல்பட்டால் உடனே அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் சனாதன தர்ம ஆட்சியல்லவா நடைபெறுகிறது? எதற்கு வழக்கை விசாரித்துக்கொண்டு என நீதிபதிகள் தத்தமது வாழ்க்கைப் பாட்டை பார்ப்பார்கள். 


இந்தியாவில் உள்ள  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் தொடங்கியுள்ள டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 20 கோடியாக உள்ளபங்குச்சந்தையில் புழங்கும் இளைஞர்களின்து. 


இப்போது இந்தியாவில் 5 சதவீதம் அளவுக்கு மின் வாகனங்கள் விற்று வருகின்றன. இந்த எண்ணிக்கை முதலில் 2.6 சதவீதமாக இருந்தது. 


இந்தியாவில் வேகமாக ஓடும் மனிதராக தடகள வீரர் அனிமேஷ் குஜூர் உள்ளார். இவரது சாதனை ரெக்கார்ட் 10.18 நொடிகள் ஆகும். 


அண்மையில் மறைந்த தர்மேந்திரா, இந்தி திரைப்பட உலகில் 65 ஆண்டுகாலம் நடித்து வந்தவர். இவரது திரைப்பயணம் 1960களில் தொடங்கியது. 


விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர், அப்போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைத் தொட வெறும் 770 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். 


செனாப் ரயில்வே பாலம், தரையில் இருந்து 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 


இந்தியாவின் தலைநகரான டெல்லியை காற்று மாசுபாட்டில் மூழ்கடிக்க மதவாத கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு, சீரழிவிற்கு 27 ஆண்டுகள் தேவையாக இருந்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 


அசாம் பாடகர் ஜூபின் கார்க்கின் இறுதிச் சடங்கிற்கு 1.5 மில்லியன் மக்கள் வந்திருக்கிறார். உலகில் ராணி இரண்டாம் எலிசபெத், போப் பிரான்சிஸ், மைக்கேல் ஜாக்சன் ஆகியோருக்கு அடுத்து இத்தனை பேர் கலந்துகொண்ட இரங்கல் நிகழ்வு இதுதான். 


 


மூலம் 

டைம்ஸ் ஆப் இந்தியா


2


முதன்முதலாக.... 2025


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர மேயராக தெற்காசிய முஸ்லீம் தலைவர் ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியிருக்கிறார். இவருக்கு எதிராக அதிபர் ட்ரம்ப், பெரும் பணக்காரர்கள் பிரசாரம் செய்தும் வெற்றியை ஈட்ட முடியவில்லை. நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதாக வாக்கு கேட்டு வென்றிருக்கிறார். சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், தனது உரையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேருவைப் பற்றி

குறிப்பிட்டார். 


இஸ்ரோ, விக்ரம் 3201 என்ற பெயரில் முதல் செமிகண்டக்டர் சிப் உருவாக்கியது.இதன்மூலம், தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சுயசார்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 



வெனிஸ் திரைப்பட விழாவில், 'சாங்க்ஸ் ஆப் பார்காட்டன் ட்ரீஸ்' என்ற திரைப்படத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த அனுபர்ணா ராய், சிறந்த இயக்குநர் விருதை வென்றார். 


1954ஆம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் எம் எஃப் ஹூசைன் வரைந்த ஓவியத்தின் பெயர், கிராம யாத்திரை. இந்த ஓவியம் நார்வே நாட்டிலுள்ள மருத்துவமனையில் மாட்டப்பட்டிருந்தது. அண்மையில் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்த கிராம யாத்திரை ஓவியம், நூறு கோடி ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. 


இந்தியாவிலுள்ள மிசோரம் மாநிலம், 98.2 சதவீத கல்வி அறிவைப் பெற்று சாதித்துள்ளது. இன்றைய தேதியில் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். அதேபோல, கேரள மாநிலம் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு அங்கு உள்ளூர் தேர்தலில், மதவாத கட்சி தேர்தலில் வென்று வருவதால் மோசமான பேரழிவுகள் நடைபெற வாய்ப்புள்ளது. 


இந்தியாவைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் என்ற தனியார் நிறுவனம், 3டி பிரிண்டிங்கில் இரண்டு செமி கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின்களை தயாரித்துள்ளது. இது ஒரே வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. 


சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஸ்டாக் தனது ஹார்ட் லேம்ப் என்ற சிறுகதை நூலுக்காக பெற்றுள்ளார். இதை ஆங்கிலத்தில் தீபா பஸ்தி என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்த சிறுகதை நூல், தென்னிந்தியாவில் உள்ள முஸ்லீம் பெண்களின் தினசரிவாழ்க்கையை மையமாக கொண்டது. 


மூலம் 

டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!