காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதவை`!
காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது
படம் எடுக்கும் விலங்கிடமிருந்து பாதுகாப்பான தொலைவில் தள்ளியிருக்கவேண்டும்.
அமைதியாக இருக்கவேண்டும்.
காட்டுக்கான விதிகளை கடைபிடியுங்கள்.
நேர்மையான முறையில் படம்பிடியுங்கள்.
படம்பிடிக்கும் விலங்கு பற்றி முதலில் ஆராய்ச்சி செய்து படியுங்கள். பின்னர் அதனை அதுதொடர்பான ஆராய்ச்சியாளர்களிடம் பேசி அதன் பழக்கவழக்கங்களை கவனியுங்கள்.
பத்திரிகையாளர் போல நிஜத்தை மட்டுமே புகைப்படமாக பதிவு செய்யவேண்டும். உங்கள் வருகை விலங்கை எரிச்சல் ஊட்டினால் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான தொலைவுக்கு சென்றுவிடுங்கள்.
புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்வதற்கு அவசரப்படாதீர்கள்.
புகைப்படங்களை முழுமையான தகவல்களுடன் சேகரித்து பிறருக்கு பகிருங்கள்.
செய்யக்கூடாதவை.
விலங்குகளுக்கு ஆபத்தான உணவுகளை வழங்க கூடாது.
உணவிட்டு அதன் தன்மையை மாற்றி படம் பிடிப்பது தவறானது.
விலங்குகளிடம் நெருங்க கூடாது.
கூட்டமாக உள்ள விலங்குகளின் அருகில் செல்லக்கூடாது.
விலங்குகளை காயப்படுத்தக்கூடாது.
விலங்குகளை போஸ் கொடுக்க வைக்க கூடாது.
சரணாலயங்களுக்கு, மிருக காட்சி சாலைகளுக்குசென்று படம்பிடிக்க கூடாது.
போட்டோஷாப்பில் எடிட் செய்து உண்மையை மாற்றக்கூடாது.
பிபிசி வைல்ட்லைஃப்
கருத்துகள்
கருத்துரையிடுக