டார்க் எனர்ஜி என்றால் என்ன?
பதில் சொல்லுங்க ப்ரோ?
வின்சென்ட் காபோ
டார்க் எனர்ஜி என்றால் என்ன?
இதற்கு தீர்மானமான பதிலை யாருமே சொல்லமுடியாது என்பதே உண்மை. டார்க் எனர்ஜி என்பதை பால்வெளி விரிவடைகிற தன்மை அதிகரிக்கிற அம்சம் என்று சுருக்கமாக சொல்லலாம். சார்பியல் கோட்பாட்டு மாடல்கள் இதனை பல்வேறு விதமாக வரையறுக்கின்றன. காலியான வெற்றிடம், இதுவரை அறியப்படாத புதிய சக்தி, விண்வெளியிலுள்ள இடத்தை பிடித்துக்கொள்ளும் எதிர்மறை விளைவுகளை உள்ளடக்கிய ஆற்றல் என்று பலவாறாக குறிப்பிடுகிறார்கள். இறுதியான ஐன்ஸ்டீனின் புவிஈர்ப்பு சக்தி தவறு என்று கூறப்பட்டு புதிய கோட்பாடு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டார்க் எனர்ஜியை யார் விளக்கி மர்மத்தை தீர்த்தாலும் அவருக்கு நோபல் பரிசு நிச்சயம் உண்டு.
பால்வெளி என்பது ஒன்று மறைந்ததும் மற்றொன்று தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளதா?
விண்வெளியில் நிறைய பால்வெளி மண்டலங்கள் உள்ளதாக வானியலாளர்கள் நம்புகிறார்கள். குறிப்பிட்ட சீரான கால இடைவெளியில் பெருவெடிப்பு நிகழ்வதாகவும் கூறுகிறார்கள். பால்வெளி மண்டலம் மெல்ல சுருங்கி வெடித்து மீண்டும் தொடங்கும் பிக் பவுன்ஸ், பால்வெளி விரிவடையும் செயல்பாடு தலைகீழாகி புதிய பால்வெளி மண்டலம் உருவாகும் பிக் கிரன்ச் ஆகியவை மூலம் தோன்றுவதும், மறைவதும் சாத்தியமாகலாம்.
ஜீன் எடிட்டிங் வரலாற்றைச் சொல்லுங்கள்?
மூலக்கூறு உயிரியலில் முக்கியமான கண்டுபிடிப்பு கிரிஸ்பிஆர் கேஸ் 9 ஆகும். கிளஸ்டர்டு ரெகுலர்லி இன்டர்ஸ்பேஸ்டு ஷார்ட் பலின்ரோமிக் ரிப்பீட்ஸ் என் இதனை விரிவாக சொல்லலாம். 1987ஆம் ஆண்டு ஈகோலி பாக்டீரியத்திலிருந்து இதனை கண்டுபிடித்தனர். இது பாக்டீரியத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகளின் உடலில் ஒரு பகுதியாக இருந்தது பத்தாண்டுகளுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் ஒரு செல்லினுள் நுழையும்போது, என்சைம்கள் வைரஸ் மரபணுக்களை கிரிஸ்பிஆர் வரிசை, டிஎன்ஏ ஆகியவற்றுக்கு இடையில் நகல் செய்து ஒட்டுகிறது. இதுவே வைரஸை உடலிலிருந்து விரட்டும் நினைவை மரபணுவுக்கு கொடுக்கிறது. இதனை ஆர்என்ஏ வழிகாட்டி உதவுகிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் தீர்க்கமுடியாத பிறப்புக்குறைபாட்டு நோய்களை முன்னே கண்டறிந்து தீர்க்கலாம். நோயுற்ற மரபணுக்களை கண்டுபிடித்து அதனை நீக்கிவிட்டு வேறு ஒன்றை அங்கே பொருத்தினால் வேலை முடிந்தது. இதனை விஷயத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர் மட்டுமல்ல எவரும் செய்யலாம். இனி உலகிலுள்ள பல்வேறு சட்டப்பூர்வ அல்லது அங்கீகாரமற்ற ஆய்வகங்களில் டிஎன்ஏவை மாற்றி ஒட்டும் வேலைகள் ஆராய்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தீமில் நெட்பிளிக்ஸ் படங்களை கூட தயாரித்து வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.
நாம் வாழும் சூழல், உணவுமுறை மரபணுக்களை பாதிக்குமா?
1953ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்ஸன் ஆகியோர் டிஎன்ஏவின் வடிவமைப்பைக் கண்டுபிடித்தனர். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எப்படி ஒருவரின் குணம், நிறம் கடத்தப்படுகிறது என்பதை அறிவதற்கான முதல்படி அது. 1970களில் எபிஜெனோம் என்ற பெயர் அனைவரிடமும் புழக்கத்தில் இருந்தது. டிஎன்ஏ, அதனைச் சுற்றியுள்ள புரதம் அதில் ஏறபடும் வேதிமாற்றங்களை எபிஜெனோம் என்று அழைக்கலாம். இந்த வேதிமாற்றங்ள் சூழல், உணவுமுறை ஆகியவற்றால் ஏற்படுகிறது.
கருமுட்டை, விந்தணுக்கள் சூழ்நிலையால் மாற்றங்களை சந்திக்காத போது அவை அடுத்த தலைமுறையில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இன்று ஒருவருக்கு ஏற்படும் உடல்பருமன் பிரச்னைக்கு தாத்தா இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவார் என்று காரணம் சொல்ல முடியாது. மூதாதையர்களிடமிருந்து சில விஷயங்கள் கண்களின் பச்சை நிறம், உடலின் நிறம், உறுப்புகளின் அமைப்பு தொடரலாம். தொடராமலும் இருக்கலாம்.
bbc
கருத்துகள்
கருத்துரையிடுக