என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை! சரோஜினி நாயுடு ஆல் இந்தியா ரேடியோ உரை!

 

 

என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை!

 

 


சரோஜினி நாயுடு


1948ஆண்டு பிப்ரவரி 1 அன்று, இந்துத்துவவாதிகளால் காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு இரு நாட்களுக்குப் பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சரோஜினி நாயுடு ஆற்றிய உரையின் சுருக்கம் இது.


இன்று காந்தியை விரும்பிய அனைவரும், அவரை அறிந்தவர்கள், அவரது பெயர் மட்டுமே கேள்விப்பட்டவர்கள் கூட அவருக்காக அஞ்சலி செலுத்துகிறோம். ஒரு அதிசயம் போன்ற ஆளுமை அவர். அவரது இழப்பு நம் மனதில் சோகத்தையும் கண்ணீர் கண்ணீரை ஆற்றொழுக்காகவும் பெருக்குகிறது. அவர் எப்படி வாழ்ந்தார், தனது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை இழந்தார், அவரது ஆன்ம சக்தி எத்தகையது, வெறும் சதையல்லாத ஆற்றலின் வடிவமாக உலக ராணுவ வலிமைகளையும் மிஞ்சியிருந்தார். காந்தி சிறியவர்தான், எளியவர்தான். அவரிடம் பணம் கூட கிடையாது. ஏன் உடுத்திக்கொள்ள உடலை மறைக்க முழுமையான உடை கூட அவரிடம் இல்லை. ஆனால் அவரை விட வலிமையான ஆயுதங்களை கொண்டவர்களை எதிர்த்து நின்றார். இது உலகளவில் எங்காவது சாத்தியமா?


இதற்கு காரணம் ஒன்றுதான், அவர் யாருடைய பாராட்டுகளுக்காகவும் ஏங்கவில்லை. அதனை எதிர்பார்க்கவில்லை. அவர் தனது பாதையை முழுமையாக நம்பினார். தனது கருத்தியலின் படி நடந்தார். அவர் பரீட்சிப் பார்த்தவற்றை செயல்படுத்தினார். இப்பாதையில் அவர் மனிதர்களின் வன்முறை, பேராசை ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் யாராலும் எதிர்க்கமுடியாத ஆயுதமாக அகிம்சை எதிர்நின்றது. உலகம் முழுக்க போரிட்டு அழிவைச் சந்தித்தாலும், ரத்த ஆறு ஓடினாலும் அவர் தனது அகிம்சை சார்ந்த கொள்கையில் இறுதி வரை பின்வாங்கவில்லை. தனது வாழ்க்கை முழுக்க தான் நம்பிய அகிம்சையை தேடிக்கொண்டே இருந்தார்.


1924ஆம் ஆண்டு காந்தி தனது முதல் உண்ணாநோன்பை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக நடத்தினார். இது இந்தியா முழுக்க கவனிக்கப்பட்டது. அவரது இறுதி உண்ணாநோன்பும் கூட இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகத்தான். ஆனால் அந்த போராட்டத்தை இந்தியாவில் உள்ள இந்தியர்கள் ஆதரித்து அவருடன் நிற்கவில்லை. ஆனால் இந்தியா என்பது காந்தியின்றி கிடையாது. இந்தியா வளர்ந்து பிரிவினையாகியிருக்கலாம். மக்களின் இனக்குழுக்களிடையே வெறுப்பும் சந்தேகமும் வளர்ந்து உண்மையில்லாத தன்மை உருவாகியிருக்கலாம். அவர்கள் மகாத்மாவை சரிவர புரிந்துகொள்ளாத குழு என்றே கூறமுடியும். காந்தியை விட வேறு யாரும் இந்து மதத்தினரால் வெறுக்கப்பட்டு வன்முறைக்கு உள்ளாகியிருக்கமுடியாது. இந்து மதத்தை காந்தி அளவுக்கு உயர்த்தியவரும் யாரும் இல்லை. நாடு இன்றைக்கு சந்திக்கிற நிலைமைக்கு நாம் அவர் நம்பிய கொள்கை மீது நம்பிக்கை வைக்காததைத்தான் காரணமாக சொல்ல முடியும். இப்போது அவர் இறந்துவிட்டார் என்பதால் அவர் நம்பிய கொள்கைகளை நாம் கைவிட வேண்டுமா? இப்போது அவர் இல்லை என்பதால் நாம் என்ன செய்வது? அவரது கருத்தியல், அவரது தொண்டர்கள், அவரது பணி ஆகியவற்றை மேம்படுத்துவதா அல்லது சோகத்தில் அழுதுகொண்டிருப்பதாழ


நாம் நமது தனிப்பட்ட சோகத்தை மறந்துவிட்டு நாட்டின் சவால்களை எதிர்கொள்ள த யாராகவேண்டும். அவரை வீழ்த்தியவர்களுக்கு எதிராக நாம் நிற்கவேண்டும். நாம் காந்தியின் படைவீர ர்கள். நமது பதாகை உண்மை. நமது கவசம் அகிம்சை. நமது கண்களில் சொரியும் கண்ணீரை துடைத்தெறிந்துவிட்டு உற்சாகமும் நம்பிக்கையும் கொள்ளவேண்டும். அவர் இனி பேசப்போவதில்லை. அவரது செய்தியை பல லட்சம் இந்தியர்கள் உலகம் முழுக்க பல தலைமுறைகளுக்கு பேசுவார்கள்.


காந்தி தனது இறப்பிற்கு முன்னர், இங்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. உண்மையைத் தேடும் ஆன்ம பயணம் மட்டுமே உள்ளது என்றார். உண்மைக்காகவே வாழ்ந்து உண்மையைத் தேடும் பயணத்தில் கொலைகாரன் ஒருவனின் கையில் உயிரை விட்டுள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக நின்றாக உலகத்திற்கு இந்த செய்தியை கொண்டு செல்ல முடியும்தானே? நாம் அவரது செய்தியை நிறைவுசெய்யமுடியும்தானே? நான் காந்தியுடன் பல்வேறு உண்ணாநோன்புகளை ஒன்றாக செய்திருக்கிறேன். இன்று அவர் இறந்து நம்மை விட்டு தூரம் சென்றுவிட்டார். நாம் அவரை எப்படி தொடர்வது?


அவர் இறந்தது பல்வேறு மன்னர்கள், இந்து மன்னர்கள், முகலாயர்கள் ஆண்ட இடம். ஆங்கிலேயர்கள் ஆண்ட இடத்தை இந்தியா இனி தலைநகராக கொள்ளும். பல்வேறு மன்னர்கள் இறந்து புதைக்கப்பட்ட டில்லியில் அவர் தகனம் செய்யப்படவிருக்கிறார். அகிம்சை வழியில் போராடிய மகாவீரர், எளிமையானவர். இந்தியாவில் வாழ்ந்து மடிந்த மன்னர்களில் மிகப்பெரியவர். துணிச்சலானவர். என்னுடைய தந்தை எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. அவர் எங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. நாம் இப்போது ஒரு உறுதிமொழியை ஏற்போம். நமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வலிமையை வேண்டுவோம். இந்தியாவின் விதியை நிறைவேற்றுபவர்களை உருவாக்குவோம். காந்தியின் வாழ்க்கை வலிமையானது. அவருடைய இறப்பு மூலம் அது மேலும் உறுதியைடந்துள்ளது. இறப்பு கடந்த உன்னத அமரத்துவத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் காந்தி.


ரீடர்ஸ் டைஜஸ்ட்




கருத்துகள்