சேவலை ஆராய்ந்து அதன் மரபணு தொடர்ச்சியை கண்டறிய விரும்புகிறேன்! - பெர்முடா ஆராய்ச்சியாளர் ஈபென்

 

 

 

Cock, Farm, Village, Chicken, Polygamy

 

 

ஈபென் ஜெரிங்

உயிரியல் பேராசிரியர்

நோவா சவுத்ஈஸ்டரன் பல்கலைக்கழகம்

தெற்கு புளோரிடா


உலகில் எத்தனையோ விலங்குகள் இருக்க நீங்கள் பரிணாமவளர்ச்சி பற்றி அறிய சேவலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?


பிராக்டிகலாக பார்த்தால், அதனை எளிதாக கவனிக்கமுடியும் என்பதால்தான். அவை என்ன செய்தாலும் உங்கள் கண்முன்னேதான் செய்யும். தனிப்பட்ட பராமரிப்பு விஷயங்கள் தேவையில்லை. தொலைதூரம் பறந்து சென்றுவிடாது. இணையத்தில் கூட சேவல், கோழிகள் பற்றிய படங்களை எளிதாக பெற்று ஆய்வு செய்யமுடியும் என நடைமுறை எளிதாக இருந்ததால்தான் நான் சேவலைத் தேர்ந்தெடுத்தேன்.


வேறு சிறப்புக்காரணங்களைக் கூறுங்கள்.


பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை ஆராய்வதைப்போலசெய்வதை கைவிட்டு அமேசான் மழைக்காடுகள், பப்புவா நியூகினியா என இரண்டு இடங்களிலும் ஆராய்வது சிறப்பான பயன்களைத் தரும் என நினைக்கிறேன். சேவல்கள் சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் ஏராளமான உயிரியல் அம்சங்களை சந்திக்கின்றன. அவை சந்திக்கும் எதிரிகள், போட்டியாளர்கள், இயற்கை இடர்களை நாம் ஆய்வகத்தில் உருவாக்க முடியாது. பெர்முடா கிழக்குப்பகுதியில் 11500 கோழிகள் இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.


இந்தப்பறவைகள் எப்படி இங்கு வந்திருக்கமுடியும். அதாவது, பூமிக்கு…


அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து சேவல்கள், கோழிகள் வந்திருக்கலாம். பெரும்பாலும் இவை கடல் வழி வணிகம் மூலம் பரவியிருக்கலாம். மேலும் இவற்றை வேட்டையாடி கொல்லும் விளையாட்டிற்கு கூட பலர் சேவலைக் கொண்டு வந்திருக்கலாம்.


உங்கள் ஆராய்ச்சி பற்றி மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


நாய், ஓநாய் ஆகியவை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓநாயிலிருந்து உருவான நாய் வீட்டு விலங்காக மாறியது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல்தான் சேவலும் கூட. அவற்றுக்கும் கூட இப்படி ஒரு மரபணு தொடர்ச்சி இருக்கலாம். அவை எங்கே தொலைந்து போயின. இவற்றைப் பற்றி முழுமையாக அறியத்தான் நான் முயன்று வருகிறேன்.


டிஸ்கவர் இதழ்


ஜோன் மெய்னர்ஸ்




கருத்துகள்