நான் உளவாளியாக விரும்பவில்லை! - அலெக்ஸ் யங்கர், முன்னாள் தலைவர் எம்16 அமைப்பு

 

 

 

 

Alex Younger: MI6 chief questions China's role in UK tech ...

 அலெக்ஸ் யங்கர்
முன்னாள் எம்16 தலைவர்

நீங்கள் உளவாளியாக விரும்பினீர்களா?

ரகசிய உலகில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதும் நான் நினைக்கவில்லை. என் வழியில் இந்த வாய்ப்பு வந்தது என்று சொல்லலாம்.

தொழில் வாழ்க்கையில் தனியாக வாழ வேண்டியிருக்கும் அல்லவா?

வழக்கத்திற்கு மாறான வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து வந்தேன். 30 ஆண்டுகளில் அது இயல்பாகிவிட்டது. வேலைக்காக தனிமைப்படுத்தப்பட வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு இடையில் நெருக்கமான உறவு இருந்தது.

உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் உண்மைகளை சொல்லியிருக்கிறீர்களா

என் குழந்தைகளிடம் சரியான நேரம் வரும்போது சொல்லமுடியும் என்று நம்புகிறேன். மற்றபடி அனைவரிடமும் இதுபற்றி பேசுவது கடினமானது. நீங்கள் திரைப்படங்களில் காணும் அறமில்லாத சூழ்நிலை வேறு. உண்மையில் அமைப்பு, அதிலுள்ள மனிதர்கள், நமது மதிப்புகள் எப்போதும் இப்பணியில் மாறுவதில்லை.

நீங்கள் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளீர்கள். அமெரிக்கா அங்கு, அமைதிக்கான ஒப்பந்தம் சார்ந்து செயல்பட்டுள்ளது. இங்கு அங்கு தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், முன்னர் நிலவிய நிலை வேறு. இன்றுள்ள நிலை வேறு. அவர்களிடம் அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் வேறுவிதமானவை.

உங்கள் அமைப்பு, அதிலுள்ள உறுப்பினர்கள் ரகசியமாக செயல்படுவது எப்படி நடைபெறுகிறது?

ரகசியமாக செயல்படுவது என்பது எங்களது செயல்பாட்டின் ஒரு பகுதி. அப்படி செயல்படுவதில்தான் உறுப்பினர்களின் பாதுகாப்பு அடங்கியுள்ளது. சட்டத்தை மீறாத உங்களைப்போலவே மதிப்புகளை வைத்திருக்கும் ஆட்களைத்தான் இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கிறோம்.

நீங்கள் எம்16 தலைவராக இருக்கும்போது எந்த பேட்டியும் அளிக்கவில்லையே?

அப்போது ஒரு பாதுகாப்பு அமைப்பின் எல்லை எதுவரை என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஜனநாயகத்தை காப்பதற்கான பணி என்பது கடினமானது. அதில் நாடு சார்ந்த அமைப்புகள், ஆதரவு அணிகள ஆகியவைற்றை எதிர்கொண்டாக வேண்டும். அப்போது நாட்டின் விதி என்பது எங்கள் கைகளில் இருந்தது.


டைம்
ஏஞ்சலினா ஜோலி

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்