தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

 

 

 

Introvert + Social Phobia = Sucks | waltbox

 

 

 

நம் உணர்வுகளில் முதலில் உருவானது எது?

சுவையுணர்வு அடிப்படையானது. அதுவே முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். இதில் முடிவான தீர்வு என்பதை கூற முடியாது. காதுகளில் ஒலியைக் கேட்பது பெரியளவு மாற்றம் ஏற்படவில்லை. 275 மில்லியன் ஆண்டுகளாக அத்தன்மை அப்படியேதான் உள்ளது. 2015ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லங்ஃபிஷ் சிறப்பாக காது கேட்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தனர். 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய மீன்கள், தங்கள் துடுப்புகளை பயன்படுத்தி நிலத்தில் நடந்து சென்று வெவ்வேறு நீர்நிலைகளுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறன்கொண்டவை என இந்த மீன்களைக் குறிப்பிடுகின்றனர்.

தனிமையில் ஓர் அறையில் இருக்கும்போது மனப்பதற்றம் அதிகரிப்பது ஏன்?

மனிதர்கள் இயல்பாகவே புத்துணர்ச்சியாக காற்று, உடற்பயிற்சி, சூரிய வெளிச்சம் ஆகியவற்றை தவிர்க்க முடியாத தன்மை கொண்டவர்கள். சூழல் நெருக்கடியால் அப்படி நேரும்போது அதனை மனதளவில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். இந்த மன நெருக்கடியை பதற்றம் எனலாம். இதனை சமாளிக்க சூழலை மெல்ல பழகிக்கொண்டு உடற்பயிற்சி செய்வது, புதிய திறன்களை கற்பது, உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுவது என வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நல்லது.

சிங்கம் ப்ர்ர என அபான வாயுவை வெளிவிடுமா?

வீட்டில் வாழும் பூனை உர் முதல் ப்ர்ரர என காற்றில் அபான வாயு பிரிவது வரை அனைத்தையும் செய்யும். சிங்கம் செய்யுமா என்றால் இதில் பலரும் ஆளுக்கொரு கருத்தை நீயா நானா என முன்வைத்து திணறடிக்கிறார்கள். சிங்கத்தில் உடலில் அமைந்துள்ள எலும்பு இதுபோன்ற ப்ர்ர்... ஒலியை எழுப்ப முடியாமல் தடுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எதுவோ, காற்றில் பூப்போல அபான வாயு பிரிவது உடல் நலத்திற்கு நல்லதுதான்.

சளி தொற்றும்போது மூக்கு அடைத்துக்கொள்வது ஏன்?

சாதாரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படாது. அப்படி ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, உடலிலுள்ள நோய் பாதித்த செல்களை வெளியேற்ற நினைக்கிறது என்று பொருள். சளி தொற்றும்போது, உடல் அளவுக்கு அதிகமாக திரவப்பொருளை மூக்கில் சுரக்கிறது. சளியோடு போராட்டம் நடைபெறுகிறது ஆஃப் டூட்டியில் உள்ளது மூக்கு என புரிந்துகொள்ளுங்கள். எப்போது மூக்கில் காற்று வேகமாக பிரச்னையின்றி செல்கிறதோ அப்போதுதான் நிலைமை சரியாக உள்ளது என்று அர்த்தம்.

பொதுவாகவே நமது மூக்கில் செல்லும் ஆக்சிஜன் அளவு சில மணிநேரங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதாவது வலது மூக்கில் காற்றின் அடர்த்தி கூடியும் இடதில் குறைந்தும் பின்னர் இதே மாற்றங்கள் தலைகீழாக நடைபெறும். எதற்கு இப்படி நடைபெறுகிறது? காரணம் ஒரே மூக்கில் காற்று அதிகமாக சென்றால் மூக்கு வறண்டுவிடும். இதனால்தான் ஒரு மூக்கு ரெஸ்ட் எடுக்கும்போது, மற்றொரு மூக்கு வேலை செய்யும். பணிகள் பாதிக்கப்படாது.
 

கருத்துகள்