தலித் அரசு பணியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக்க நடத்தும் சீக்ரெட் திட்டம்! சீரியஸ்மேன் - சுதீர் மிஸ்ரா

 

 

 

 

Serious Men Movie Review: An incisive satire on Indian ...
Nawazuddin Siddiqui Cast in the Lead of Sudhir Mishra’s ...

 

 



சீரியஸ்மேன்

சுதீர் மிஸ்ரா

Director:

Sudhir Mishra

Writers:

Niren Bhatt (additional screenplay), Manu Joseph (Based on the book by


படம் பொறுப்புள்ள மனிதர்கள் என்ற நாவலைத் தழுவியது. இதனை மனுஜோசப் எழுதியுள்ளார். அறிவியல் கழகங்களில் பிராமணர்கள் எப்படி தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பதவிகளை அடைய முயல்கிறார்கள் என்பது நாவலில் ஒரு கதை. மற்றொன்று அய்யன் மணி என்ற உதவியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக நிரூபிக்க என்னென்ன தகிடுதத்த வேலைகளை செய்கிறார் என்பது மற்றொரு கதை. 



படத்தில் அய்யன் மணி, அவரது மகனை 


Serious Men movie review: Nawazuddin Siddiqui’s engaging ...

எப்படி ஜீனியஸாக மாற்றுகிறார், அதற்கு அவர் செய்யும் வேலைகள் என்ன, அதன் பாதிப்பு, ஆகியவற்றை சிறப்பாக விவரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தியில் சீரியஸ்மென் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தைப் பார்க்கும்போது, அய்யன் மணி ஓஜாவை திருமணம் செய்துகொண்டுள்ளது கூறப்படுகிறது. சப்டைட்டிலில் அவர் தமிழ்ப்பெண் என வருகிறது. ஆனால் தமிழ் டப்பில் அவர் தெலுங்குப் பெண்ணாக காட்டப்படுகிறார். ஹோட்டலில் நீச்சல் குளத்தருகில் பிரசவக்காட்சி இதற்கு உதாரணம். தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என அறியாத மனைவியாக இந்திரா திவாரி பிரமாதமாக நடித்துள்ளார். தன் மகனைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டு அவர் ஆவேசமாக பேசும் காட்சி அபாரமாக வந்துள்ளது.

நாவல் முழுக்க பரவியிருக்கும் நையாண்டி படத்திலும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. பீச்சில் ஒருவன் தற்கொலை செய்துகொள்ளப்போகிறான் என அய்யன் மணி மனைவியிடம் பேசும் காட்சி, முதல் காட்சியில் உறவுகொண்டபிறகு ஒஜா வயிற்றில் கரு தங்கச்செய்யும் பாவனை, விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை சுதந்திரதேவி சிலையாக மாற்றி அமைப்பது என படம் நெடுக நக்கல், நையாண்டி சிறப்பாக வந்துள்ளது. 

Serious Men Movie Review



கிறிஸ்தவ பள்ளிகளில் கூட தலித்துகளை எப்படி கேள்வி கேட்டு ஒதுக்குகிறார்கள், அவர்களை மதம் மாற்ற கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறார்கள் என்பதை விளக்கும் காட்சி அபாரம். படம் முழுக்க நவாசுதீன் சித்திக்கின் நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. தான் எப்படி இருக்கவேண்டும், தன் மகன் எப்படியிருக்கவேண்டும் என்று திட்டமிட்டு அனைத்தையும் செய்வது, பின்னர் அந்த திட்டங்கள் குளறுபடியாகும்போது தவிப்பது என அசத்தியுள்ளார்.

நாவலில் ஆச்சார்யாவுக்கும் கீழ்நிலை உயிரியல் துறை பெண் அதிகாரிக்கும் உள்ள உறவை எளிமையாக இயக்குநர் காட்டிவிட்டார். படம் முழுக்க தலித்துகளின் வாழ்க்கை, அவர்களைப் பற்றிய மேல்தட்டு ஆட்களின் எண்ணம், சமூக அழுத்தங்களில் சிக்கிக்கொள்வது, மந்தை மாடுகளாக வாழ்வது பற்றிய எள்ளல் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. தலித் கட்சிகள் எப்படி தங்கள் வணிகத்திற்கு தலித்துகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகவே சொல்லிவிட்டனர். அம்பேத்கரை புகழும் அரசியல்வாதி விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடங்கி வைக்கும் காட்சி இத்தகையை முரண்களை நமக்கு கூறுகிறது.

தமிழ் டப்பைப் பொறுத்தவரை சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறார்கள். இரு கதாப்பாத்திரங்களும் தமிழர்கள் என்பதை மனதில் கொண்டிருந்தால் சில இடங்களில் உரையாடல்கள் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

சீரியசாக பார்க்கவேண்டிய படம்!

கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்