சிசிடிவி மூலம் குற்றவாளிகளை ஸ்மார்ட்டாக பிடிக்கும் காவல்துறை! எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்?

 

 

 

 



Image, Sign, Warning, Icon, Cctv, Black, Security

சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க முடியுமா?

சென்னை பெருநகரத்தில் காவல்துறையினர் 2.9 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில் 1.5 லட்சம் கேமராக்கள் தனியார் வீடுகள், கடைகளுக்கானவை. இதன்மூலம் கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் ஸ்மார்ட்டாக பிடித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 14 கொலைக்குற்றங்களில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமான உதவி சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 60 வழிப்பறி கொள்ளையர்கள் இம்முறையில் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையில் அண்மையில் புல்லட்டுகளை திருடி நகருக்கு வெளியில் விற்கும் திருட்டு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். எப்படி பிடிக்கிறார்கள்?

நகரத்தின் பாதைகள், ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை இணைத்து யோசிக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இதில் வெற்றி பெறுகின்றனர். அனைவரும் இதனை கவனித்து புரிந்துகொள்ள முடியாது.முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து 50 முதல் 500 மீட்டர் வரையிலான சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் எடுக்கின்றனர். அதில் பார்த்து சந்தேகப்படும் ஆட்களை குறித்து வைத்துக்கொள்கின்றனர். அதில் பிடிபடாதபோது, நூறு கிலோமீட்டருக்குள் அவர்கள் இருக்கிறார்கள் என்று கணித்து அங்கு ஷெல்டரில் வண்டியை விட்டுவிட்டு போயிருக்கலாம் என தேடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் கீழ்பாக்கத்தில் வண்டியை திருடியவரை பல்வேறு இடங்களில் சிசிடிவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்து பிடித்திருக்கிறார்கள்.

டைம்ஸ்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்