சிந்தனை, காலத்தைக் கடந்தால் காதல் கிடைக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

 



ஜே கிருஷ்ணமூர்த்தி







தென் தேர் ஈஸ் லவ்

ஜே கிருஷ்ணமூர்த்தி

தமிழாக்கம்

ஒருவரின் மனம், தேடுதலில் வேட்கை கொண்ட மனத்தை பெற்றுத்தராது. காதலைப் பொறுத்தவரை மனம் அதை தேடவேண்டும் என்பதல்ல. தேடாமலேயே அது கிடைத்துவிடும். நாமறியாமல் காதல் கிடைத்துவிடும்.காதல் கிடைப்பது மனிதர்கள்  முயற்சி, செய்து பெறும் அனுபவம் போல இருக்காது.

காதலை காலத்தைப் பொறுத்து தேடினால் பெற முடியாது. காதலை ஒன்றாக, பலவாக, தனிப்பட்டதாக, பொதுவானதாக பார்க்கலாம். இதை பூவைப் போல கூறலாம். பூக்களின் மணத்தை, அதை கடந்து செல்பவர்கள் பார்க்கலாம். மணத்தை நுகரலாம். பூக்களை தொல்லையாக நினைப்பவர்களும், அதை மலர்ச்சியாக பார்ப்பவர்களும் உண்டு. பூக்களுக்கு அதைக் காணபவர்கள் அருகில் இருந்தாலும் அல்லது வெகுதூரத்தில் இருந்தாலும்  ஒன்றுதான். பூக்களிடம் நறுமணம் உள்ளது. அதை அனைவருக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறது.

காதல் என்பது புதியது, உயிரோடு இருப்பது, உற்சாகம் அளிக்கக்கூடியது. இதில், நேற்று, நாளை என்பது கிடையாது. சிந்தனை என்பதைக் கடந்தது. வெகுளித்தனமற்ற உலகில் வாழும் அப்பாவித்தனமான மனது காதலை தெளிவாக அறியும். தியாகம், வழிபாடு, உறவு, உடலுறவு என மகிழ்ச்சியின் வடிவங்கள், வலியின் வடிவங்கள் ஆகியவற்றை பல்வேறு விதமாக மனிதர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேடுதல் இயற்கையாகவே நின்றால்தான் காதலை எளிதாக கண்டுணர முடியும்.

காதலுக்கு எதிர்முனை, முரண்பாடுகள் கிடையாது. ‘’நான் இப்போது அப்படியொரு காதலை அடையாளம் கண்டால் எனது மனைவி , குழந்தைகள் என்ன ஆவார்கள் ’’ என நீங்கள் கேட்கலாம். நீங்கள் கூறுவது உங்கள் பாதுகாப்பிற்கானவை. இப்படி கேட்பவர்கள் சுயநினைவுள்ள, சிந்தனை வளையத்திற்குள் இருக்கிறார்கள். அதற்கு வெளியே வந்துவிட்டவர்களுக்கு இதுபோல கேள்விகள் ஏதும் எழாது. வெளியே இருப்பவர்களுக்கு காதலில் சிந்தனை, காலம் என இரண்டுமே இல்லை என்று தெரியும். நான் இப்படி கூறுவதை மயங்கியது போல நீங்கள் படித்தாலும் சிந்தனையை , காலத்தை கடந்து செல்வதன் அர்த்தம், சோகத்தை கடந்து செல்கிறீர்கள் என்பதுதான். இப்படி செல்வதை ஒருவர் உணர்வதைத்தான் காதல் என்று கூறுகிறேன்.

ஆனால் உங்களால் மேற்சொன்னவற்றை செய்யமுடியாதபோது நீங்கள் என்ன செய்வது? உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாதபோது நீங்கள் எதையும் செய்யமுடியாது. உங்களுக்குப் புரிகிறதா? ஏதும் செய்யப்போவதில்லை. அகவயமாக உங்களுக்குள் அமைதி இருக்கும். நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தேடுவதோ, தேவையாக இருக்கிறது எனவோ, வேண்டும் எனவோ நினைக்கவேண்டியதில்லை என்பதே இதன் அர்த்தம். இதற்கான மையம் ஏதுமில்லை. எனவே, அதுதான் காதல்.

 

Freedom from the known

Jk

Jkrishnamurti.in


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்