டீனேஜ் பெண்களை வல்லுறவு செய்து கொல்ல திட்டமிட்ட நண்பர்கள்!

 












லாரன்ஸ் பிடேக்கர்  - நோரிஸ்

திட்டக்குழு உருவாக்கி நாட்டிற்கான திட்டங்களை தொலைநோக்காக உருவாக்குவது போல சிலர் உண்டு. இவர்கள், தாங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை செய்துவிட்டு இறங்குவார்கள். இதனால் அனைத்து விஷயங்களும் நினைத்தபடி கச்சிதமாக நடக்கும் என்று கூறமுடியாது. ஆனால் செய்பவர்களுக்கு செயலில் தீவிரம் இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள்தான் லாரன்ஸ் – நோரிஸ் ஆகிய இரு கொலைகார நண்பரகளும்.. லாரன்ஸ் ஒருவரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சிறை சென்றார், அங்கு தன் வாழ்நாள் முழுக்க இருக்கப்போகும் நண்பன் ராய் நோரிஸை சந்தித்தார். இருவரும் பேச பேச அவர்களின் சிந்தனைகள் ஒத்துப்போயின. அப்புறம் என்ன? நண்பர்கள் ஆனார்கள். நண்பர்கள் ஆனதே டீனேஜ் பெண்களை கடத்தி வல்லுறவு செய்து கொல்வதற்காகத்தான். திட்டத்தை ப்ளூபிரின்ட் போட்டு வைத்துவிட்டு காத்திருந்தனர். பதிமூன்று தொடங்கி பத்தொன்பது வயது பெண்கள்தான் லட்சியம்.

லாரன்ஸ் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து வேன் ஒன்றை வாங்கி அதற்கு மர்டர் மேக் என்று பெயர் கூட வைத்து தயார் செய்துவிட்டார். அடுத்த ஆண்டான 1979ஆம் ஆண்டு ஜூனில் நோரிஸ் விடுதலையானார். மருத்துவமனையில் சிறிதுகாலம் இருந்த நோரிஸ் முன்னர் சிறையில் போட்ட திட்டப்படி லாரன்ஸை சந்திக்க வந்தார்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு லிண்டா, ஜாய், ஜாக்குலின் என டீனேஜ் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள். காவல்துறை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. சன்லேண்டைச் சேர்ந்த ஷிர்லி என்ற டீனேஜ் பெண் மட்டும்தான் உயிர்பிழைத்து வந்தவர். மார்பு, முகம் எல்லாம் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. உடல் நெடுக யாரோ அடித்தது போன்ற காயங்கள், சிராய்ப்புகள் தெரிந்தன.  சில நாட்களிலேயே லாரன்ஸ், நோரிஸ் ஆகிய இருவரும் கைது  செய்யப்பட்டனர். பெண்களை கடத்தியதற்கான முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் போதைப்பொருட்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

வேனில் சென்று வேலை, மாடலிங், இலவச பயணம், கஞ்சா கொடுப்பது என பெண்களை வண்டியில் ஏற்றிக்கொள்வது முதல் பணி. உண்மையில் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்தினார்கள். அடுத்து, அவர்களை வல்லுறவு செய்து சித்திரவதை செய்து கொல்வது இறுதியான பணி. இப்படி இறக்கும் பெண்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது ஆகியவற்றை லாரன்ஸ் – நோரிஸ் செய்தனர். முதலில் நோரிஸ் விசாரணையில் தான் நிரபராதி என சாதித்தார். பிறகு, தான் செய்த கொலைகளை விவரித்தார். காவல்துறையினர்  கொலைகாரர்களின்  வேனில் 500 இளம் பெண்களின் புகைப்படங்களை எடுத்தனர். கூடவே, ஜாக்குலின் என்ற பெண் இறக்கும் முன்னர் எடுத்த வீடியோவையும் கைப்பற்றினர். 

1980ஆம் ஆண்டு நோரிஸ் சொன்ன  தகவல்படி, சான் கேப்ரியல் மலைத்தொடர், சான் டிமாஸ்  பகுதிகளுக்கு காவல்துறை அதிகாரிகள்  சென்றனர். அங்கு கொல்லப்பட்ட பெண்களின் மண்டையோடுகள், எலும்புகளை கண்டெடுத்தனர். மண்டையோடுகளைக் கூட துளையிட்டு சிதைத்திருந்தனர் கொலைகாரர்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரீப் பீட்டர், இன்னும் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை என்று கூறினார். லாரன்ஸ் – நோரிஸ் ஆகியோரிடம் பெறப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் பத்தொன்பது பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நோரிசுக்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.   

 கொலைக்குற்றத்தை லாரன்ஸ் இறுதிவரை ஏற்கவில்லை. அதனால் நீதிபதிகள், ஜூரிகள் விட்டுவிடவில்லை. ஜூரிகளின் கோரிக்கைப்படிமரணதண்டனை விதிக்கப்பட்டது. இதற்கடுத்து, நீதிபதிகள் லாரன்சிற்கு 199 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர்.

 படம் - பின்டிரெஸ்ட்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்