கடத்தி, வல்லுறவு செய்து கொலை - கென்னத் - ப்யூனோ சகோதர்களின் அட்டூழியம்

 










1951ஆம் ஆண்டு, விலைமாது ஒருவருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே  தத்து கொடுக்கப்பட்டார். பதினெட்டு வயதில் திருமணம் செய்துகொண்டார். ஒருமுறை தனது பெண் தோழிக்கு கடிதம் எழுதியபோது, தான் ஒருவரைக் கொன்றதாக கூறினார். ஆனால், அதை தோழி கென்னத் தனது ஆண்மையின் பெருமைக்காக கூறுவதாக நினைத்துக்கொண்டார். 1973ஆம் ஆண்டு காவல்துறை கென்னத் பியான்சியை கொலை வழக்கு ஒன்றில் சந்தேகப்பட்டது. ஆனால் உண்மையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே கென்னத்தின் கார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததை காவல்துறை அதிகாரி ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

1976ஆம் ஆண்டு கென்னத் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு கென்னத்தின் சகோதரர்  இருந்தார். அவருடன் சேர்ந்துதான் பின்னாளில் பல்வேறு கொலைகளைச் செய்தார். சகோதரர் பியூனோ ஜூனியர், சிறுவயதில் இருந்தே அம்மாவுடன் பல்வேறு ஊர்களில் வசித்த அனுபவம் கொண்டவர். பதினான்கு வயது தொடங்கியதிலிருந்தே கார்களைத் திருடி விற்கத் தொடங்கினார். சோடோமி எனும் மலப்புழை வழியாக  உடலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்ட ஆள். கார் திருட்டுக்காக சிறை சென்ற அனுபவம் உள்ளவர். செக்ஸ் குற்றவாளியான காரில் செஸ்மேன் என்பவரை குற்றங்களுக்கு ரோல்மாடலாக கொண்டார்.

ப்யூனோவுக்கு, பல்வேறு மனைவி, பெண் தோழிகள் மூலம் நிறைய குழந்தைகள் உண்டு. இவர் தனது சகோதரன் கென்னத்தைப் பயன்படுத்தி விலைமாதுக்களை அழைத்து வந்து சித்திரவதை செய்து கொன்றார். கென்னத் –ப்யூனோ ஆகியோர் இணைந்து யோலண்டா வாஷிங்டன் என்ற பத்தொன்பது வயது பெண்ணை கடத்தி வல்லுறவு செய்து கொன்றனர். பிறகு அடுத்தடுத்து கொலைகள் நடந்து கொண்டே இருந்தன. பெண்களைப் பிடித்து செக்ஸ் அனுபவித்துவிட்டு கொன்று நிர்வாணமாக சாலையோரத்தில் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிடுவதே கென்னத், ப்யூனோ ஆகியோரின் வேலை. ஒரு  கட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பெண்கள் சாலையில் கால் வைக்கவே பயந்தனர். காவல்துறை பல்வேறு ஆட்களிடம் விசாரித்து, கொலையாளிகள் இருவர் என சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டது.

அந்த நேரத்தில் கென்னத், கொலை பாணியை மாற்றிக்கொள்ள வேண்டுமென தீர்மானித்தார். எனவே, பெல்லிங்காம் எனும் நகருக்கு வந்தார். அங்கு கட்டிட பாதுகாவலர் வேலையைத் தேடிக்கொண்டார். 1979ஆம் ஆண்டு டயானே வைல்டர், கரன் மாண்டிக் என்ற இருபெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் யாரிடம் பேசினார்கள் என விவரங்களை சேகரித்தபோது கென்னத் பெயர் பட்டியலில் வந்தது. போலீசார் விசாரணையில் நான் லீனியராக பேசியதில் மாட்டிக்கொண்டார். கென்னத்தின் அறையை சோதித்தபோது, பல்வேறு திருட்டுப் பொருட்கள்  இருந்தன.

கென்னத் முதலில் தான் எதுவுமே செய்யவில்லை என மறுத்தார். பிறகு விசாரணை அதிகாரிகள் ஹிப்னாசிஸ் செய்து உண்மையைக் கறந்தனர். அப்போதும் கூட ஆளுமை பிறழ்வு காரணமாக கொலைகள் செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முயன்றார். தனது சகோதரர் ப்யூனோவை கொலைகாரர் என காட்டிக்கொடுத்தார். என்ன செய்தாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தார்.

இதற்காக ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அப்படித்தான் கவிஞர், நாடக ஆசிரியர் வெரோனிகா லின் காம்டன் என்ற பெண்ணின் அறிமுகம் கென்னத்திற்கு கிடைத்தது. வெரோனிகாவிற்கு, கென்னத் செய்த கொலைகள் மேல் தீவிர கவர்ச்சி இருந்தது. அப்போது வெரோனிகா சீரியல் கொலைகாரர் பற்றி நாடகம் ஒன்றை எழுதியருந்தார். அதை அனுப்பி கென்னத்தின் கருத்தைக் கேட்டார்.

கென்னத் வெரோனிகாவை பயன்படுத்தி சிறையில் இருந்து வெளியே வர நினைத்தார். அதற்காக, சில உதவிகளைக் கேட்டார். இதனால் வெரோனிகா, கென்னத் வேலை செய்த பெலிங்காம் சென்று அங்கு உலாவிய பெண்ணை வல்லுறவு செய்து கென்னத்தின் விந்தை அந்த பெண்ணின் யோனியில் திணித்தார். இதனால் காவல்துறை அப்போது குற்றவாளி இன்னும் வெளியேதான் இருக்கிறான் என முடிவுக்கு வந்தது. 1980ஆம் ஆண்டு வெரோனிகா,  சிறையில் இருந்த கென்னத்தை சந்தித்தார். ஒரு நூலை கென்னத் கொடுத்தார். அதில், வைக்கப்பட்டிருந்த கையுறையில் அவரின் விந்து சேமிக்கப்பட்டிருந்தது பெலிங்காமில் ஒரு பெண்ணை வெரோனிகா கொல்ல முயன்றபோது, காவல்துறையில் மாட்டிக்கொண்டார்.

வெரோனிகா சிறையில் இருந்தபோது ‘ஈட்டிங் தி ஆஷஸ்’ என்ற நூலை எழுதினார். இந்த நூல் அவரின் சுயசரிதையாகும். இவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. ப்யூனோ, கென்னத் ஆகியோருக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்படும் நாள் நெருங்கியது. வழக்கை திசைமாற்ற கென்னத் வாய்க்கு வந்த கதைகளை எல்லாம் உளறினார். ஆனால் எதுவும் கச்சேரிக்கு ஏறவில்லை, ப்யூனோவுக்கு பிணை இல்லாத ஒன்பது ஆயுள்தண்டனை, கென்னத்திற்கு இரண்டு ஆயுள்தண்டனை கிடைத்தது

படம் - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்