சீனா 2020









சீனா 2020


சீனா தொழில்நுட்ப வேகத்தில் முன்னணியில் செல்கிறது. ஏறத்தாழ உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5 ஜி தொழில்நுட்பத்தை தரும் முதன்மையான இடத்தில் உள்ளது. விண்வெளி ஆய்விலும் பின்தங்கி விடுவார்களா என்ன?


நாங்கள் அடுத்த ஆண்டு செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முடிவில் உழைத்து வருகிறோம் என்கிறார் சீன விண்வெளி மைய இயக்குநரான வாங் சீ.


ரஷ்யா, ஐரோப்பியர்கள் தயங்கும் செவ்வாய் திட்டத்திற்கு சீனா வேகமாக தயாராகி தன்னை நிரூபிக்க முந்துகிறது. இது அதன் தொழில்நுட்ப வலிமையை மட்டுமல்ல, வல்லரசு நாடு என்ற தன்மையையும நிரூபித்து அமெரிக்காவை பின்தள்ள உதவக்கூடும்.

நன்றி: ஃப்யூச்சரிசம்

பிரபலமான இடுகைகள்