ரீசைக்கிள் பிளாஸ்டிக் ரெடி! - அன்லிமிடெட் மறுசுழற்சி செய்யலாம்
ரீசைக்கிள் செய்துகொண்டே இருக்க உதவும் பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்யலாம் என்ற ஒரே காரணத்திற்காக அதனைப் பயன்படுத்த முடியாது. பிளாஸ்டிக்கில் பல்வேறு வகைகள் உண்டு. சிலவற்றை மறுசுழற்சி செய்யும் முயற்சி அதனைத் தயாரிக்கும் செலவையே மிஞ்சும். அப்போது என்ன செய்வீர்கள்.
அமெரிக்க அரசின் ஆற்றல் துறையைச் சேர்ந்த லாரன்ஸ் பெர்க்கிலி தேசிய ஆய்வகம் இதற்காகவே பலமுறை மறுசுழற்சி செய்ய முடியும் தன்மையிலான பிளாஸ்டிக்கை உருவாக்கி உள்ளனர். அனைத்து பிளாஸ்டிக்குகளையும் ரீசைக்கிள் செய்ய முடியாது. அதற்காவே நாங்கள் புதியமுறையில் பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை மாற்றியுள்ளோம் என்கிறார் வேதியியலாளர் பீட்டர் கிறிஸ்டென்சன்.
பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படுவை. இதில் பல்வேறு வேதிப்பொருட்களை சேர்த்து பொருட்களாக த்தயாரிக்கிறார்கள். அப்படித்தான் கேரிக்பேக், உடைகள், ஸ்ட்ராக்கள், நாற்காலிகள் தயாராகின்றன.
750 மிலி பெப்சி ரூ.35 ரூபாய்க்கு என ஆபரில் அசங்காமல் வாங்கும் பெப்சி பெட்களை ரீசைக்கிள் செய்வது மிக கஷ்டம். புதிய பிளாஸ்டிக்கை டிகடோனாமைன் என்று அழைக்கின்றனர் - டிரைகீட்டோன் அமைன் ஆகிய வேதிப்பொருட்களின் கலவை இது.
நன்றி: சயின்ஸ் அலர்ட்