போர்டிங் பாஸில் என்ன அச்சிடப்பட்டுள்ளது?
ஏர் இந்தியாவுக்கு செல்கிறீர்கள். உடனே கோயம்பேடு பஸ் போல ஏறி உட்கார்ந்துவிட முடியாது. போனவுடன் செக்யூரிட்டி செக்கிங் முடித்து, நீங்கள் ஏற வேண்டிய கேட் அருகே உள்ள கௌண்டரில் போர்ட்டிங் பாஸ் வாங்க வேண்டும். இதுதான் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதற்கான டிக்கெட்.
இதிலுள்ள ஆறு எழுத்துக்கள் பயணிகளின் விவரங்களைக் குறிக்கும். இந்த எழுத்துகள் ராண்டம் முறையில் உருவாக்கப்படுகின்றன. இதில் பயணிகளின் விவரம், தொடர்பு முகவரி ஆகியவை பதிவிடப்பட்டிருக்கும்.
இதில் உள்ள A, F என்ற எழுத்துகள் முதல் வகுப்பு சீட்களைக் குறிக்க பயன்படுகின்றன. y என்ற எழுத்து எகானமி வகுப்பை குறிக்கிறது. க்யூ என்ற எழுத்து இருந்தால் தள்ளுபடி ரேட்டில் எகானமி வகுப்பை புக் செய்திருக்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடும். அதோடு பி என்ற எழுத்து அச்சிடப்பட்டிருந்தால் விமான இருக்கை அப்டேட் ஆகும் வாய்ப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எஸ்டிபிசி என்று அச்சிடப்பட்டிருந்தால் நீங்கள் செல்லும் வழியில் ஹோட்டலில் இலவசமாக தங்கிச்செல்ல முடியும் என்பதைக் குறிக்கும்.
நன்றி: மென்டல் ஃபிளாஸ்