குழந்தைகளைக் கொன்றால் காசு!







அசுரகுலம்

சைக்கோ கொலைகாரர்கள்

மியூகி இஷிகாவா


1948 ஆம் ஆண்டு ஜனவரி  12. டோக்கியோவின் வசிடா பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ஐந்து குழந்தைகள் இறந்துபோனதை விசாரித்து வந்தார்கள். குழந்தையை எதேச்சையாக பிரேத பரிசோதனை செய்தபோதுதான் குழந்தைகள் இயற்கையாக இறக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

அந்த குற்றத்திற்கு காரணம் என மியூகி இஷிகாவை கைது செய்த து காவல்துறை. ஐந்து குழந்தைகள் மட்டுமல்ல, நூறு குழந்தைகளுக்கு மேல் கொல்லப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரிய வந்தது.

1897 ஆம் ஆண்டு இஷிகாவா பிறந்தார். இவரின் இளமைக்காலம் பற்றி அதிக விவகாரங்கள் தெரியவில்லை. ஜப்பானின் குனிடோமி நகரில் பிறந்தார். டோக்கியோ பல்கலையில் பிறந்தவர், டகேஷி இஷிகாவாவை மணந்தார்.

மியூகியின் வேலை, கோடோபுகி  மருத்துவமனையில் செவிலி. பின்னர்,  அம்மருத்துவமனையின் இயக்குநரானார். இம்மருத்துவமனை குழந்தைகள் பிறப்புக்கு புகழ்பெற்றது.

அந்த காலகட்டத்தில் ஜப்பானில் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. பல தம்பதிகள் குழந்தை கருவாக இருக்கும் நிலையிலும், குழந்தை வளர்க்க முடியாதவர்களும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர். இந்த குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் கொல்ல முயற்சித்தார் மியூகி.

மியூகி, ரஜினி போலத்தான். படத்தில் வரும் நாயகனாய் சொன்னதை செய்தார். 169 குழந்தைகளை இரக்கமின்றி கொன்றார்.  உள்ளூர் அரசும் இதனை தெரிந்தது போல காட்டிக்கொள்ளவில்லை. அங்கு வேலை செய்தவர்களும் வேலை போய்விடுமென வாயை மூடிப் பேசினர்.

மியூகி, அவரது கணவர், மருத்துவர் சிரோ நகாயாமா ஆகியோர் சூப்பராக பிளான் போட்டு தம்பதிகளிடம் காசு பார்த்தனர். இறந்த குழந்தைகளுக்கு தவறான காரணங்களைச் சொல்லி இறப்பு சான்றிதழைத் தயாரித்தனர்.

குழந்தைகளின் உடல்களை சோதனை செய்து பார்த்து,உ ண்மை  தெரிந்தவுடன் மியூகியை கைது செய்தனர். பிறகு அவர்களது தோழர்களையும்தான் கம்பிக்கு பின்னால் தள்ளினர். விசாரணையில் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்த நாற்பதுக்கும் மேலான குழந்தைகளின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.

குழந்தைகளின் இறப்புக்கு அவர்களை அழிக்கச்சொன்ன பெற்றோர்கள்தான் காரணம் என்று கோர்ட்டில் உரக்கச் சொன்னார் மியூகி. இதன்பின்னர்தான், குழந்தைகளுக்கான உரிமைகளை ஜப்பான் அரசு உருவாக்கியது. மியூகிக்கு எட்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கணவர், சக தோழருக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.


ஆக்கம்:பொன்னையன் சேகர்

நன்றி: அப்சொல்யூட் க்ரைம், விக்கிப்பீடியா