முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா?

Image result for egg

ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி


முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாமா?


அமெரிக்கர்கள் முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து சமைக்கிறார்கள். காரணம்,அங்குள்ள அறைவெப்பநிலை அப்படி. ஆனால் ஐரோப்பியர்கள் முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதில்லை. அது தேவையில்லை என்றும் எண்ணுகின்றனர். என்ன காரணம்ழ


முட்டை வழியாக பரவும் பாக்டீரியா சால்மோனெல்லா. இந்த பாக்டீரியா முட்டையின் ஓடு உருவாகும் முன்பே வந்து விடுகிறது. எனவே முட்டை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பது அவசியம். சமைக்கும்போது 71 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த பாக்டீரியா அழிந்துபோகிறது.

வெப்ப ரத்தம் கொண்ட உயிரினங்களில் குடலில் சால்மோனெல்லா சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் என்பது மருத்துவர்களுக்குத் தெரியும். இது உணவில் கலந்தால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முட்டைகளை விற்கும் முன்னரே, சூடான நீரில் அதனைக் கழுவுகின்றனர் பின்னர், அதன் மீது நுண்ணுயிரிக் கொல்லிகளை அடித்து சுத்தப்படுத்திய பின்னரே விற்கின்றனர்.


பாக்டீரியாக்களின் பெருக்கத்தை குளிர்சாதனப்பெட்டி கட்டுப்படுத்தும் என்ற காரணத்திற்காக அமெரிக்கர்கள் முட்டையை ஜில்லென்ற இடத்தில் வைக்கின்றனர். பின்னர் எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிடுகின்றனர்.


ஐரோப்பிய யூனியனின் உத்தரவுப்படி சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கும் முட்டைகளை முடிந்தவரை சீக்கிரமே பயன்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதில்லை.

குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் அதனைப் பேக்கிங் விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால், அதனை அதிகநாட்கள் வைத்து பயன்படுத்த முடியும்.

நன்றி: ஹெல்த்லைன்

படங்கள்: ஹெல்த்லைன்