மோட்டோ இசட் 4 எப்படி?




moto z4



Moto Z4


மோட்டோ இசட் 4 பெரிய அம்சங்களோடு வெளிவரவில்லை. எதற்கு போட்டி?
 கூகுளின் பிக்சல் 3எ, ஆசுஸ் ஸென்போன் 6. 

இந்த போன் மோட்டோவின் முந்தைய போன்களையெல்லாம் நினைவுபடுத்துகிறது.  பேட்டரி, ஜேபிஎல் ஸ்பீக்கர், வயர்லெஸ் சார்ஜ், இன்ஸ்டா ஷேர் பிரின்டர் போன்ற வசதிகள் ஜோராக ஈர்க்கின்றன. மோட்டோ இசட் 4 என்பது ஒரு மாடுலர் போன் எனவே இதிலுள்ள பாகங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப கழற்றி மாட்டி களேபரம் செய்யலாம். 


ஓஎல்இடி திரையை சென்னை வெயிலிலும் பளிச்சென பார்க்க முடியும். கொரில்லா கிளாஸ் நம் கைரேகைகள் திரையில் அசிங்கமாக தெரிவதை மறைக்கின்றன. ஆப்டிகல் சென்சார் மூலம் விரல் ரேகையை ஸ்கேன் செய்வது படுமந்தமாக வேலை செய்கிறது. டெஸ்ட் செய்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தினத்தந்தியே வந்துவிடும். இந்த விஷயத்தில் சாம்சங் பரவாயில்லை. 

எனவே, ஃபேஸ் அன்லாக் வசதியைப் பயன்படுத்தி மோட்டோவைப் பயன்படுத்தலாம்.  பரவாயில்லை எனும் ரகத்தில் வேலை செய்கிறது இந்த வசதி. மோட்டோ இசட்டில் ஹெட்போன் துளையை தூக்கியெறிந்த கம்பெனி, இசட் 4 இல் மீண்டும் அதனைப் பொருத்தியுள்ளது. 


நீருக்கு எதிரான பாதுகாப்பு என்று பார்த்தால் கஷ்டம். எனவே பிளாஸ்டிக் கவரில் போட்டுத்தான் போனைப் பாதுகாக்கவேண்டும். காரணம், அப்படி ஒரு டிசைனை மோட்டோவில் செய்திருக்கிறார்கள். 

மேற்சொன்ன கூகுள், மோட்டோ ஆசுஸ் ஆகிய அனைத்து கம்பெனிகளும் க்வால்காம் ஸ்னாப் டிராகன் புரோசஸரையே பயன்படுத்துகின்றன. 675, 700, 855 என மாடல்கள் மட்டும் மாறுகின்றன. 

பப்ஜி விளையாண்டாலும் மோட்டோ சலிக்காமல் ஈடு கொடுக்கிறது என்பதால் கவலை வேண்டாம். 


நன்றி: டிஜிட்டல் டிரெண்ட்ஸ்