மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க்
உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்?
அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன்.
மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா?
பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும்.
இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா?
வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் கலந்துகொள்ளாதவர்களுக்கு அவர்கள் புரியவைக்கவேண்டும்.
நீங்கள் ஸ்வீடன் மற்றும் லண்டனில் வெப்பமயமாதலுக்காக போராடுகிறீர்கள். ஆனால் உண்மையில் சீனாவில்தானே மாசுபாடு அதிகம் நடைபெறுகிறது?
நான் சீனா செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதித்தால் நிச்சயம் அதனை எதிர்ப்பேன். விமானத்தில் செல்ல முடியாதபோதும் நான் இரயிலில் அங்கு செல்ல முடியும். லண்டனுக்கு அப்படித்தான் சென்றேன். எனவே இதுகுறித்து சிறிது முன்னதாகவே திட்டமிடவேண்டும்.
இந்தியாவும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடுகிற நாடுதானே
இந்தியா இன்னும் நிலக்கரியைப் பயன்படுத்தி வருகிறது. இதனால்தான் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.
இந்தியாவுக்கு நீங்கள் வர வாய்ப்புள்ளதா?
இந்தியாவிலிருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நான் வர ரெடிதான்.
வெப்பமயமாதல் குறித்து நீங்கள் போராட என்ன காரணம்?
வகுப்பில் பசியில் உலவும் பனிக்கரடிகள், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக், உருகும் பனிக்கட்டிகள் ஆகிய படங்கள் என்னை மாற்றின. யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிக்கொண்டிருந்தனர். நான் என்னால் என்ன செய்யமுடியும் என யோசித்து செயல்பட முடிவெடுத்தேன்.
2018 ஆம்ஆண்டு நீங்கள் நாடாளுமன்றத்தின் முன்பு தனியாக போராடத் தொடங்கினீர்கள். இன்று அப்போராட்டம் உலகம் முழுக்க பரவியிருக்கிறதே?
நான் முதலில் நாடாளுமன்றத்திற்கு எதிராக உட்கார்ந்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் நான் இதுகுறித்த செய்தியை பதிவு செய்திருந்தேன். எனவே மெல்ல அப்பகுதி மக்களால் பகிரப்பட்டது. பின்னர் அடுத்தநாள் பத்திரிகையாளர்கள் வந்தனர். அடுத்தடுத்த நாட்களில் மக்கள் வர, போராட்டம் பெரியளவில் நடக்கத் தொடங்கியது. பிற நாடுகளிலும் போராடத் தொடங்கினர்.
நீங்கள் ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்டவர். நோய் பாதிப்பைக் கடந்து எப்படி செயல்படுகிறீர்கள்.
பொதுவாக இப்பாதிப்பு கொண்டவர்கள் சமூகத்தோடு இணைந்து செயல்பட மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் எனக்கு அதில் பிரச்னை இல்லை. இப்பாதிப்பினால்தான் நான் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா