நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!




Norio Nagayama is listed (or ranked) 9 on the list Famous Japanese Serial Killers




அசுரகுலம்

நோரியோ நகாயாமா


எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.


1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவருக்கு மரணதண்டனை நிறைவேற்றக்கூடாது என உலகின் பலபுறங்களிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் எழுந்தன. நான்கு பேர்களை கொன்ற குற்றம் முன்னிருக்க, நீதி சமநிலை செய்யப்பட்டது. 1997 ஆம் ஆண்டு நோரியோவின் மூச்சு அரசு மூலம் நிறுத்தப்பட்டது. 48 வயதில் இறந்துபோன நோரியோ மூலமாக மரணதண்டனை பற்றிய விவாதம் ஜப்பானில் எழுந்தது.


என்ன நடந்தது?

பால்யம் கடந்த வயதில் நடந்த குற்றம் நோரியோவின் வாழ்வைக் குலைத்து போட்டது. அமெரிக்க கடற்படைத் தளமான யோகோசுகா எனுமிடத்தில் பத்தொன்பது வயதில் நான்கு பேர்களை சுட்டுக்கொன்றார்.வண்டி ஓட்டுநர் இருவர்,  தங்கும் விடுதி, கோவில் காவலர் இருவர் ஆகியோரைத் துப்பாக்கி மூலம் தாக்கினார். நோரியோ.

19 வயது மைனர் என்று தண்டனையை தள்ளி வைத்தாலும், வாழ்வதற்கான கொடுப்பினை நோரியோவுக்கு இல்லை. 1979 ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பின் அப்படி இப்படி என தொண்ணூறுகள் வரை தண்டனை தள்ளி வைக்கப்பட்டு 97 இல் நோரியோவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. 

30 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்தவரை ஜப்பான் அரசு ரகசியமாக தூக்கிலிட்டது. ஏன்? அவரது வழக்குரைஞர், முன்னாள் மனைவி ஆகியோருக்கு அவர் இறந்துபோனது நாளிதழ் படித்துத்தான் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


மைனராக இருக்கும் போது செய்த தவறுக்கு நோரியோ வருந்தினார். இதனால் தான் செய்யும் பிராயசித்தமாக தி டியர்ஸ் ஆஃப் இக்னோரன்ஸ் எனும் நூலை எழுதி அதற்கான ராயல்டியை தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் சிறையில் மணம் புரிந்துகொண்டார். இந்த சம்பவங்கள் நிகழ்ந்த போது ஆண்டு 1971. பின் 1983 ஆம் ஆண்டு இரண்டாவது நூலாக வுடன் பிரிட்ஜ் எழுதினார்.

1989 -1993 வரை மரண தண்டனையை ஜப்பான் நிறுத்தி வைத்தாலும் 25 பேர்களுக்கு மரணதண்டனை வழங்கியது. அது எப்படி என்று கேட்காதீர்கள். அப்படித்தான்.  வாழ்க்கை அனைவருக்கும் இரண்டு வாய்ப்புகளை வழங்குவது கிடையாது. கிடைக்கும் கிளையை கவனமாக பற்றிக்கொள்ளாவிட்டால் சுயசரிதை எழுதிவிட்டு காற்றில் சாம்பலாக பறக்கவேண்டியதுதான்.




ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: மர்டர்பீடியா, நியூயார்க் டைம்ஸ்


















பிரபலமான இடுகைகள்