சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏன்?
முஸ்லீம் எழுத்தாளர்கள் அஞ்சுவது ஏன்?
பாஜக அரசு கருத்தியல் ரீதியாக தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவு எப்படியிருக்கிறது? அரசு அளிக்கும் தடுப்பூசியைக் கூட தன் இனத்தை அழிக்கும் முயற்சியாக பயப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்வது, உரிமை கேட்பவர்களை பாகிஸ்தானுக்கு செல்லக்கூறுவது என நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட ஒருவரைக் குறைசொல்வதை விட நாட்டின் நிலை அப்படி யோசிக்க சொல்லுகிறது என புரிந்துகொள்ளலாம்.
நாட்டின் நிராதரவான நிலையை எப்படி மக்களிடம் அரசு ஒப்புக்கொள்ளும்.? உடனே பாகிஸ்தான்தான் பிரச்னைக்கு காரணம், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்தான் இந்தியாவின் பிரச்னைக்களுக்கு மூல ஊற்று என பற்றி வைத்தால் போயிற்று. அனைத்து ஊடகங்களும் கைப்பிடியில் இருக்க கவலை என்ன?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தையை நான் பெற்றெடுத்தேன். அப்போது அவளை முஸ்லீம் பெயரைச் சொல்லி எப்படிக்கூப்பிடுவது பிரச்னை ஏற்படுமா என்றுகூட பயந்துகொண்டிருந்தேன் என கூறுகிறார் எழுத்தாளர் நாசியா எரும்.
மதரிங் முஸ்லீம் என்ற பெயரில் முஸ்லீம் மாணவர்களை முன்னணி பள்ளிகள் எப்படி அவமானப்படுத்துகின்றன என்பதை எழுதியிருக்கிறார் இவர். பொதுவெளியில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது.
நாசியா எரும் தன் நூலை பல்வேறு பள்ளிகளுக்கு தன்நூலைக் கொண்டு சென்றது நல்ல விளைவைத் தந்திருக்கிறது. இதனால் பள்ளிகளில் இஸ்லாமியர்களை கிண்டல் செய்வது தவறு என்ற எண்ணம் வளர்ந்துள்ளது. இது நல்ல விஷயமே.
ராமன், கிருஷ்ணன் குறித்து எழுதிய கவிதைகள் பலவும் உருதுக்கவிஞர்கள் எழுதியது என்பதை பலரும் மறந்துவிட்டனர் என்கிறார் பத்திரிகையாளரான சயீத் நக்வி. அனைத்து நல்லிணக்கத்தையும் உடைத்து எறிந்தது பாபர் மசூதிதான். அதன்பிறகு மக்கள் எதிரிகளாக எங்களை பார்க்க தொடங்கிவிட்டனர். என்னுடைய வீட்டில் கூட இந்துக்கள்தான் அதிகம் உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால் கும்பல் படுகொலை, அவதூறு என நிலைமை இன்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று வருந்துகிறார்.
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா