மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?
ஈர்ப்புவிசை இல்லாத விண்வெளி என்பது அதிசயங்களைப் போலவே ஆச்சரியங்களையும் கொண்டது. இதனால்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புவர்களை நாசா உட்கார வைத்து ஆய்வு செய்து பார்க்கிறது. கதிர்வீச்சு, எலும்பு தேய்மானம் ஆகிய விஷயங்கள் அதில் மாறியிருக்கிறது இதுவரை கண்டறியப்பட்டது.
தற்போது மண்டையோட்டில் மூளை மிதக்கும் திரவத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தகவல் தெரியவந்திருகிறது. மூளையின் வென்ட்ரிகல் பகுதி அதிகரித்துள்ளதும், திரவத்தின் அளவும் அதிகரித்துள்ளது.
பிஎன்ஏஎஸ் என்ற இதழில் இதுகுறித்த ஆராய்ச்சி வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்பிய பதினொரு ரஷ்ய வானியலாளர்களை சோதித்தனர். சில மாதங்கள் விண்வெளியில் தங்கி வந்தவர்களுக்கு ஆறு சதவீதம் மூளையின் பகுதிகள் மாற்றம் கொண்டுள்ள உண்மை தெரிய வந்துள்ளது. இத்தன்மையால் பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளையும் வீர ர்கள் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்த தீவிரமான ஆராய்ச்சிகள் தேவை என்கிறார் ஆன்ட்வெர்ப் நரம்பியலாளர் ஆஞ்செலிக் வான் ஆம்பெர்ஜென்.
நன்றி: ஃப்யூச்சரிசம்