பாதுகாப்பில்லாத இடத்தில் வரும் கனவு பலிக்குமா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
வேறு இடங்களில் தூங்கும் போது வரும் கனவு நம் நினைவில் நிற்பது எப்படி?
பொதுவாக புது இடத்தில் படுத்து உறங்க முயற்சிக்கும்போது உடலின் ஆதி எச்சரிக்கை உணர்வு தீவிரமாக இயங்குகிறது. அதாவது, கவனமாக உறங்கு. இது பாதுகாப்பான இடமல்ல. ஆபத்து இருக்கிறது என்ற செய்தி மூளையில் பதிகிறது.எனவே புது இடங்களில் தூங்கும்போது ஆழமான தூக்கம் வராது.
இது ஆராய்ச்சியில் தெரிய வந்த விஷயம். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த விஷயம் இது. அதேபோல இப்படி தூங்கும்போது வரும் கனவுகளை 98 சதவீதம் நீங்கள் நினைவு கூறமுடியும். பிற கனவுகள் 90 சதவீதம் காலையில் எழும்போது உங்கள் நினைவுகளோடு அழிந்துவிடும்.
அப்படியும் சில நினைவுகள், குறிப்பிட்ட கனவு காட்சி நிஜமாக விரியும்போது இடது கண் துடித்து நினைவுக்கு வந்தால் அதுதான் தேஜா வூ. இதுவும் குறைபாடு கிடையாது. உலகில் பலருக்கும் நடக்கும் நிகழ்வுதான்.
நன்றி: பிபிசி