மார்க்கெட்டுக்கு புதுசு! - மே 2019





Image result for huawei matebook pro 2019




ஹூவெய் மேட் புக் புரோ 2019

சீனர்கள் எதையும் மட்டமாக கொடுப்பார்கள், தரமில்லாமல் இருக்கும் என்பதை இந்த மேட் புக் புரோ உடைத்திருக்கிறது.

எட்டாம் தலைமுறை இன்டெலின் ஐ7 புரோசஸர், ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ் 250 கிராபிக்ஸ், பார்டர் இல்லாத திரை என அத்தனை அம்சங்களும் பிரமாதம். மேக் கணினியில் இல்லாத பல அம்சங்கள் இதில் உண்டு. அது என்ன என்று கேட்கிறீர்களா? அதை நீங்கள் வாங்கிப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக ஒன்று கணினியிலிருந்து உங்கள் போனுக்கு எளிதாக கோப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

விலை 25 ஆயிரத்திலிருந்து தொடக்கம்.


Image result for tag heuer connected golf edition




டேக் ஹையர் ஸ்மார்ட் வாட்ச்

ஒவ்வொரு டெக் கம்பெனிகளும் ஸ்மார்ட் வாட்ச் வெளியிட டேக் ஹையர் மட்டும் காலாட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களா?  கோல்ஃப் மைதானத்தின் டிசைனில் உள்ள வாட்ச் அவ்வளவு அழகாக இருக்கிறது. ஊரிலுள்ள கோல்ப் மைதானங்களை அடையாளம் காட்டுகிற வாட்ச் இது. ஆனால் கோல்ஃப் மைதானத்தில் அடியெடுத்து வைக்கவே கொள்ளைக் காசு தேவை!

Image result for leica q2


லெய்கா க்யூ 2

கம்பெனி இம்முறை என்னென்ன விஷயங்களை பொருத்தியிருக்கிறார்கள் என்று  கூறப்போவதில்லை. குறைந்த ஒளியிலும் பிரமாதமான படங்களை எடுக்கலாம். அதுதான் லெய்காவின் சிறப்பு. விலை 90 ஆயிரம்.

நன்றி: ஸ்டஃப் இதழ்