புதிய இரும்பு மனிதர்: மோடி - குற்றச்சாட்டுக்களை உடைக்கும் ஆசிரியர்




Image result for modi




நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர்

அரவிந்தன் நீலகண்டன்

கிழக்கு


டோனி ஜா படத்தின் ஆரம்பம் போல ஒரு காட்சி. அகழியில் முதலை உள்ளது. அதைக் கடந்து மரத்தின் மேலேறி காவிக்கொடியை கட்டவேண்டும். அதை கட்ட பலரும் தயங்க ஒரு சிறுவனம் தயங்காமல் மேலேறி அதை செய்கிறான். வேறுயார்? இந்தியாவின் பிரேக்கை கழற்றி போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் தள்ளிக்கொண்டிருக்கிறாரே அவரேதான். நம் தற்போதைய பிரதமர் மோடியின் கதை இது.

இதோடு ஆர்எஸ்எஸ்ஸின் தோற்றம், மருத்துவர் கேசவபலிராம் ஹெட்கேவர், சதாசிவ கோல்வல்கர், தேவரஸ் ஆகியோரின் வாழ்க்கையும் இதில் உள்ளது. ஆனால் மோடியைக் கவனிக்கவேண்டும் என்பதால் அனைத்தையும் வெட்டிவிட்டார்கள்.

தீன் தயாள் உபாத்தியாயவை தன் லட்சிய புருஷராக வழிபட்டுக்கொண்டிருந்தவர் மோடி. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஏன் தீன் தயாள் உபாத்யாய பெயர் என விளங்காதவர்களுக்கு இப்போது நன்றாக புரிந்திருக்கும்.


மோடி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிற நூல் இது. ரயில் நிலையத்தில் டீ விற்கிறவராக இருந்து ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கு, தொண்டர்களுக்கு டீ தந்து உபசரித்து பின்னர் அரசியலில் நுழைகிறார் மோடி.


1925 ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்எஸ்எஸ் இல் 1958 ஆம் ஆண்டு சேர்கிறார் மோடி. தன் பதிமூன்று வயதில் திருமணம் செய்தாலும், அதில் பெரிய விருப்பம் ஒன்றும் அவருக்கு இல்லை. பதினெட்டு வயதில் வீட்டை விட்டு தேசாந்திரியாக சுற்றித்திரிபவர் பின்னர் வீடு அடைகிறார்.

அதன்பிறகு ஆர்எஸ்ஸில் இணைந்து பணியாற்றுகிறார். இதில் குஜராத்தில் மோடி செய்த செயல்பாடுகள், அவர் மீதான குற்றச்சாட்டுகள்  அனைத்தையும் அரவிந்தன் நீலகண்டன் ஆதாரங்களோடு தவறு என்று கூறுகிறார்.


சரி தவறு என எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மோடி பற்றி அறிய நீங்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

நன்றி: பாபு பெ.அகரம்




பிரபலமான இடுகைகள்