கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?




எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம்.




வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங்களை பின்தொடருங்கள். வீடு, அலுவலகம் என எங்கே இருந்தாலும் பேரிடர் நிலைமைகளை சமாளிக்க முன்னமே பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.




இதற்கு தினசரி பயன்படுத்தும் பை என பெயரை வைத்துக்கொள்ளலாம். இதில் கைக்கடிகாரம், காம்பஸ், பேனா, நீரில் நனையாத தீப்பெட்டி, பேனா மின்விளக்கு, நோட்டு, முதலுதவி பெட்டி, விசில், பவர் பேங்க், மிளகு ஸ்ப்ரே, பர்ஸ், ஸ்மார்ட்போன், பல்கருவி தொகுப்பு, வரைபடம் ஆகியவை இருக்கும். இதை வைத்து அவசர நிலைமையை சமாளிக்கலாம். வீட்டை விட்டு தூரமாக உள்ள நிலையில் மேற்சொன்ன பொருட்கள் உங்களுக்கு உதவும்.




அடுத்து சற்று பெரிய பையைப் பார்ப்போம். இதை பிடிசி எனலாம். ஒருவர் 72 மணிநேரம் தாக்குப்பிடிக்க தேவையான பொருட்களை இப்பை கொண்டிருக்கும். இதில் குடிநீர், குடிநீர் புட்டி, புரத மிட்டாய்கள், கேன் திறப்பான், கத்தி, கரண்டி, உலோக சமையல் கலன், உலோக கலன், அடுப்பு, பாத்திரம் துலக்கும் பஞ்சு, உடை, கையுறை, மழை உறை, கூடாரத்துணி, அவசரகால தூங்கும் படுக்கை, சோப்பு, சானிடைசர், டிஷ்யூ காகிதங்கள், நீரில் நனையாத தீப்பெட்டி பூச்சி விரட்டி, பற்பசை, பிரஷ், கண்ணாடி, மின்விளக்கு, மெழுகுவத்தி ஆகியவை இருக்கும்.







மேலே கூறப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் அப்படியே தவறாமல் எடுத்து வைக்க வேண்டுமென்பதில்லை. காலமாற்றங்களுக்கு ஏற்ப கூடுதலாகவும் சேர்த்துக்கொள்ளலாம். தினசரி கையாளும் பையை எப்போதும் ஒருவர் கையில் வைத்திருக்கவேண்டும். உடைகளை வைத்துள்ள பை, பெரியது. அதை செல்லும் வாகனங்களில் வைத்திருக்கவேண்டும். இரண்டு பைகளையும் கொள்ளையர்களிடமிருந்து துரோகம் செய்யும் நட்புகள், உறவுகளிடமிருந்து பாதுகாக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும்.




உரிமை பெற்றிருந்தால் துப்பாக்கி வைத்திருக்கலாம். இப்போதெல்லாம் இந்தியாவில் காவல்துறை உதவியோடு அனைத்து தாக்குதல்களும் கொலைகளும், வல்லுறவுகளும், மானபங்கங்களும், வீடுகளை நொறுக்கி தள்ளும் அநீதிகளும் நடைபெறுகின்றன. யாரும் சொன்னால் கேட்பதில்லை. உதைத்தால்தான் சரிபட்டு வருகிறது. துப்பாக்கி சரியான ஆயுதம். கூடவே கத்தி, மின் அதிர்ச்சி ஆயுதம், மிளகுச்சாறு தூவி ஆகியவையும் தேவை. இதெல்லாம் மதவாத கும்பல்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோரிடமிருந்து உங்களைக் காக்கும்.



















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!