நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.




பெருமை மிக்க சூத்திரன்




இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட.

பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது.




தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சுமக்க வேண்டியுள்ளது.




உள்ளே இருந்தால் சூத்திரன், வெளியே இருந்தால் அவர்ணன் என இந்துமதம் தீண்டத்தகாதவர்களை நடத்துகிறது. எப்படி இருந்தாலும் அவர்கள் அநீதியிலிருந்து தப்பிவிட முடியாது.




இப்படியான சாதி பிரமிடு முறை தனித்துவமானது. உலகில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று. முஸ்லீம்கள் ஷியா, சன்னி என இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். கிறித்தவர்கள் கத்தோலிக், புரடஸ்டன்ட் மற்றும் பிரிவுகளாக இருக்கிறார்கள். இவை எதிலும் ஒரு பிரிவு இன்னொன்றை மேலாதிக்கம் செய்யவில்லை. ஆனால் இந்துமதம், சமத்துவமின்மையை உருவாக்கியே வாழ்கிறது. இந்து இந்தியா வில் மலமள்ளுவது, குப்பையை பெருக்குவது, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துவது, தூய்மைப்பணி, தெருவை கூட்டுவது, காலணி செய்வது, நிலமற்ற கூலி வேலை ஆகியவை தீண்டத்தகாதவர்களுக்கான பணிகள்.




இந்துமதம், தீண்டத்தகாதவர்கள் சொந்த நிலம் வைத்திருப்பதை தடை செய்கிறது. கிறித்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களில் வர்க்கம் உண்டு. பணக்காரராக இருப்பவர் ஏழையாகலாம். அதேபோல ஏழையாக இருப்பவர் பணக்காரராகலாம். ஆனால், இந்து இந்தியாவில் பார்ப்பனன் எப்போதும் தீண்டத்தகாதவன் ஆக மாட்டான். இந்து மதத்தில் சாதியில் உயர்த்தப்படுவதோ, தாழ்த்தப்படுவதோ நடைபெறுவது கிடையாது. கிறித்தவம், இஸ்லாமில் பல்வேறு மாறுதல்கள் நடைபெற்றாலும் இந்துமதம் அப்படியே நிலையாக தேங்கி நிற்கிறது. பிறப்பால் ஒருவர் பெற்ற சாதியே அனைத்தையும் தீர்மானிக்கும். ஒருவரின் மதிப்பெண், உதவித்தொகை, வங்கி இருப்பு கூட சாதியோடு ஒப்பிட்டால் ஒன்றுமில்லை.




பாசிசத்தை நிறுவியவர்களான நீட்சே, மேக்ஸ் முல்லர் ஆகிய வெளிநாட்டு தோழர்களை வசீகரிக்க நினைக்கிறோம். இவர்கள் தங்களுடைய இனவெறி கொள்கையை ஆர்ய பார்ப்பனர்களில் சூத்திரங்களிலிருந்து பெற்றிருக்கிறார்கள். ஆரியர்களின் இனவெறி கொள்கையை ஜெர்மனி அதிபரான ஹிட்லர் ஆதரித்து விரிவுபடுத்தினார். இதனால்தான் இன்றும் பார்ப்பனன்கள் ஹிட்லரை ரகசியமாக ஆதரித்து வருகிறார்கள்.




தூய்மையான ரத்தம் என்ற பெயரில் பாசிச கொள்கையை உருவாக்கியவர்களே ஆரியர்கள்தான். ஹிட்லர் பயன்படுத்திய சுவஸ்திகா இலச்சினை, பார்ப்பனன்களிடமிருந்து பெற்றுக்கொண்டது. மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸின் இலச்சினை ஸ்வதிகா. பாசிசம் அழிந்தாலும், ஆரிய இனவெறி இந்தியா முழுக்க நடைமுறையில் உள்ளது.




ஆரியர்களிலிருந்து வேறுபட்ட தீண்டத்தகாதவர்கள், இனவெறி வெறுப்பால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கும், ஆரியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல. அவர்கள் ஒட்டுமொத்த சமூகம், உலக அமைதிக்கே பெரும் எதிரிகள். உலகின் ஆகப்பெரும் முதல் எதிரியான ஆரியர்களுக்கு எதிராக இயங்குவதற்கான ஆதரவை மக்கள் அளிக்க வேண்டும். இந்துமதத்தை அழிப்பதன் வழியாக தீண்டத்தகாதவர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமன்றி, இந்துகள் தங்களையும், நாட்டையும் காத்துக்கொள்ள முடியும். நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.











கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!