5 ஜி போன்கள் ரெடி!

5ஜிக்கு ரெடியா?
அரசு சம்மதிக்கிறதோ இல்லையோ சீனா 5 ஜி புரட்சிக்கு ரெடியாகிவிட்டது. சீனாவின் ஜியோமி, இசட் டி இ, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்டு காங்கிரசில் தம் புரோடோடைப் மாடல்கள் மூலம் இதனை நிரூபித்து விட்டன.

ஹூவெய்
சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்தான். தற்போது 5 ஜி போனை உருவாக்கி விட்டது. மேட் எக்ஸ் என்ற மாடல், சாம்சங்கின் மடக்கும் போனுக்கு நிகராக பார்க்கப்படுகிறது. தற்போது 4.6 ஜிபிபிஎஸ் வேகத்தில் தரவுகளை தரவிறக்க முடியும். இதற்கான சோதனையை ஹூவெய் செய்து பார்த்தது.
ஆனால் விலை 2 ஆயிரத்து 600 டாலர்கள். மேட் எக்ஸ் என்ற போனும் மடக்கும் அம்சம் கொண்டதுதான். சாம்சங் தன் மடக்கும் போனை வரும் மே மாதம் விற்பனைக்கு கொண்டுவரவிருக்கிறது.
ஜியோமி
எம்ஐ போன் கம்பெனிதான். இவர்கள் மடக்கும் வகையிலான போனுக்கு மெனக்கெடவில்லை. ஆனால் 5ஜி போனுக்கான விஷயங்களை ரெடி செய்துவிட்டனர். 2 ஜிபிபிஎஸ் வேகத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. 680 டாலர்கள் செலவில் விற்கப்படும் என தெரிகிறது.
இசட் டி இ
ஹூவெய்க்கு இணையான நிறுவனம்தான் இது. விரைவில் இசட் டி இ ஏக்சன் புரோ என்பது, இவர்களுடைய 5ஜி போன். 2 ஜிபிபிஎஸ் வேகத்தில் செயல்படும் இந்த போன் முதலில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. பின்னரே அமெரிக்காவுக்கு வரும். தற்போது அமெரிக்காவில் இசட் டி இ போன்களை விற்க தடை உள்ளது.
ஆப்போ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்களும் அடுத்து வரும் மாதங்களில் தங்களது 5 ஜி போன்களை அறிவித்து வெளியிட இருக்கின்றன. எனவே டெக் விரும்பிகளுக்கு கொண்டாட்டம் உள்ளது.
நன்றி: அபாகஸ்