பாதுகாப்பு கேமரா - இந்தியா வேகம்
கண்காணிப்பில் முந்தும் இந்தியா!
இந்தியா, தன் எல்லைப்பகுதியை ஹை டெக்காக மாற்றி வருகிறது. ஏறத்தாழ இரண்டு கோடி செலவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கேமராக்களை வாங்கி எல்லைப்பகுதியில் பொருத்தி வருகிறது
என்ன பிரயோஜனம்? ஏறத்தாழ பத்து கி.மீ. வரையிலான மனிதர்களின் நடமாட்டத்தை இக்கேமராக்கள் மூலம் அறியலாம். வாகனங்களை இருபது கி.மீ. தொலைவிலேயே அறிய முடியும்.
எதற்காக இந்த பரபரப்பான பணி? சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்படுத்தும் தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்கத்தான். சீன - திபெத் பகுதியில் வீரர்கள் அசாதாரண வானிலையை சமாளித்து பாதுகாப்பு பணிகளை செய்வது கடினம். எனவே, பாதுகாப்பு கேமராக்களை இந்திய அரசு நாடியுள்ளது.
- தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்