இந்தியா தொழில்நுட்பத்தில் முந்துகிறதா?
தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் |
இந்தியா தன் சாட்டிலைட்டை தானே தகர்த்து, தொழில்நுட்ப ரீதியிலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் சீட்டையும் ரிசர்வ் செய்துவிட்டது.
இந்தியாவின் தாக்குதல் பரப்பு
1000 கி.மீ. (தற்போது நடந்த தாக்குதல் 300 கி.மீ.பரப்பு)
ரஷ்யா
600 கி.மீ.
அமெரிக்கா
6000 கி.மீ.
சீனா
10000 - 30000 கி.மீ.
இருவகை சாட்டிலைட் ஏவுகணைகள்
டாசாட்(DAASAT)
இவ்வகை ஏவுகணையே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இன்டர்செப்டர் சிஸ்டம் உதவியின்றி வட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி கொண்டது.
வட்டப்பாதை ஏவுகணை
இதனை முதலில் வட்டப்பாதையில் பொருத்தி பின்னர் செயற்கைக்கோளை நோக்கிச் செலுத்தி அதனை அழிப்பது.
இதிலும் சீனாவை ஒப்பீடு செய்தால் இந்தியாவுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். காரணம், விண்வெளி குப்பைகளை லேசர் ஆயுதம் மூலம் அழிப்பது வரை யோசித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சீன விடுதலைப்படை.
பூமியைச் சுற்றி 320 ராணுவச் செயற்கைக்கோள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதில் முந்துவது அமெரிக்கா. அமெரிக்கா 140 செயற்கைக்கோள்களையும், ரஷ்யா 80 செயற்கைக்கோள்களையும், சீனா 35 செயற்கைக்கோள்களையும் கொண்டுள்ளது.
இதில் இந்தியாவின் பங்கு இரண்டு செயற்கைக்கோள்தான். ஜிசாட் 7, ஜிசாட் -7ஏ ஆகியவை ராணுவத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றன.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா