கண்ணிவெடிகளை அகற்றும் நம்பிக்கை மனிதர்!




His Land Mine-Hunting Robot Digs Communities Out of Danger



ரிச்சர்ட் லிம் கம்போடியாவுக்கு வந்தபோது அங்கிருந்த பல சிறுவர்கள் கை, கால்கள் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தவர். அந்த பாதிப்பு கூட தெரியாமல் விளையாடுகிறார்களே என்றவர் திகைப்புக்குள்ளானார். தற்போது அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்களை உருவாக்கி வருகிறார்.

உலகப்போர்களால் பாதிக்கப்பட்ட நாடு கம்போடியா. அதற்கு இணையாக அங்குள்ள 10 மில்லியன் கண்ணிவெடிகள் அங்குள்ள மக்களில் 64 ஆயிரம் பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கணக்கு இது. தற்போது அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில் ரிச்சர்ட் உள்ளார்.


மனிதர்களும் கண்ணிவெடிகளை அகற்றுகிறார்கள்தான். ஆனால் உயிரிழப்புகளும் இதில் அதிகம். எனவே ஜேவிட் என்ற இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். 2025 ஆம் ஆண்டு நாட்டில் கண்ணிவெடிகளே இருக்க கூடாது என்ற லட்சியத்தில் ரிச்சர்ட், ஹாலோ எனும் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரின் வேகத்திற்கு மனிதர்களுக்கு பயிற்சியளித்து இதில் ஈடுபடுத்துவது முடியாது. எனவேதான் ஜேவிட் இயந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.


இந்த இயந்திரத்திற்கு 50 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. இதில் மனிதர்களாக இருந்தால் 300 டாலர்கள்தான் செலவு. ஆனால் அதிலுள்ள உயிரிழப்பு பிரச்னைகளை என்ன செய்வது?என்னிடம் நிறையப்பேர் மனிதர்களைப் பயன்படுத்தலாமே என்று கேட்கிறார்கள். நான் நோக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஐந்து நிமிடத்தில் எந்த ஆபத்துமின்றி இந்த இயந்திரம் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் கொண்டது.

மொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இயங்குகிறார்கள். இதில் ரிச்சர்ட் தன் எட்டு வயதில் தன் அத்தையை கண்ணிவெடிக்கு பலிகொடுத்தார். தயவு செய்து இதுதான் என்னுடைய பணிக்கு காரணம் என நினைக்காதீர்கள். மக்கள் யாரும் இனி குண்டுகளுக்கு பலி ஆக கூடாது என்பது மட்டுமே என் லட்சியம். தனிப்பட்ட காரணங்களை நான் எப்போதும் கூறுவதில்லை. உடனே அதற்கு இதுதான் காரணம் என்று மக்கள் கூறிவிடுவார்கள் என்று புன்னகையுடன் பேசுகிறார் ரிச்சர்ட்.

தகவல் படங்கள் -ஓஸி - தனியா பட்டாச்சாரியா



20190627ozy 115














பிரபலமான இடுகைகள்