கீ - தந்தை மகன் பாசம் மட்டுமே காப்பாற்றுகிறது
கீ
காளீஸ்
மனதில் நிற்பது
கதை, இரும்புத்திரை படத்தின் கதையைப் போல செல்கிறது. ஆனால் அப்பா - மகன் பாசம்தான் மனதில் நிற்கிறது.
சுவாரசியம்
வில்லனின் கதாபாத்திரம். பிறரை ஆட்டிவைப்பதும், உயிருக்கு அவர்கள் கெஞ்சுவதும் அவரை கடவுளாக மாற்றுகிறது. சலனமான மனது, உறுதியில்லாத மனிதர்களை உடைத்து உலகை விட்டே எறியும் உணர்ச்சிகளைக் களைந்த வில்லன் சுவாரசியம். தற்கொலை முயற்சிகளுக்கான ஸ்கெட்ச், பயமுறுத்துகிறது.
கதை நாயகன்
ஜீவா மீண்டும் கல்லூரி செல்கிறார். அதை நாம் ஏற்கமாட்டோம் என்பதாலோ என்னமோ காலேஜ் காட்சிகள் குறைவு. பெரும்பாலும் ஜாலியாக போனில், கணினியில் நோண்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் அதிகம்.
மைனஸ்
மேலே சொன்ன விஷயங்களை தவிர்த்து எல்லாமே போதாது ரகம்தான். காளீஸூக்கு முதல் படத்தில் திரைப்படமாக்கம், வசனம் என அனைத்தும் செய்து இருக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் அடப்போய்யா என சொல்ல வைத்திருக்கிறார். இசையை தேட வேண்டியிருக்கிறது. நாயகி பற்றி சொல்ல ஏதுமில்லை.
உருப்படியான விஷயம்
ராஜேந்திர பிரசாத். தெலுங்கு ராவுகாரு பிரமாதமாக நடித்து நம் மனதில் இடம்பிடிக்கிறார். சுகாசினி - ராஜேந்திர பிரசாத் கெமிஸ்ட்ரிக்கு மெனக்கெட்டாலே சுவாரசியம் கிடைத்திருக்குமே காளீஸ் சார்.
சிலர், ராஜேந்திர பிரசாத்தை ஓவர் ஆக்டிங் என சொல்லக்கூடும். ஆனால் நடிக்காத பலருக்கும் சேர்த்து அவர் நடித்திருப்பதால் அப்படித் தோன்றக்கூடும்.
-கோமாளிமேடை
நன்றி: பாலகிருஷ்ணன்