மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி
கட்டுமான கலைஞர்
பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு. நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது. அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.
லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்?
ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்டுமா என்ன?
விலை குறைந்த வீடுகள் தொடங்கி ஐஐடி வரை கட்டுமானங்களை கட்டியிருக்கிறீர்கள். இதில் எந்த கட்டுமானம் தங்களை நிறைவு கொள்ளச் செய்துள்ளது?
விலை குறைவான வீடுகளை கட்டியதுதான். மக்களை புன்னகைக்க செய்யும் விதமாக ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் அதுபோன்ற செயல்களை கொண்டாட வேண்டும் வாழ்க்கையை கொண்டாடுவதற்கான பாதுகாப்பை வீடு கொடுக்கிறது.
இந்தியா டுடே
சுனில் சேதி
கருத்துகள்
கருத்துரையிடுக