அட்ரினலின் சுரப்பு ஆபத்தா?





Why do you feel sick when you're nervous? © iStock






ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

நாம் பயப்படும்போது உடல் நடுங்குவது ஏன்?

இஎம்ஐ கட்டாதபோது, மனைவி சொன்ன காய்கறியை வாங்காதபோது, பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற சொல்லை நண்பன் சொல்லுவானோ என நினைக்கும்போது நம் உடல் நடுங்கத்தொடங்கும். இதற்கு காரணம், மூளையிலுள்ள அமைக்தலா எனும் பகுதியாகும். இந்நேரத்தில் மூளையில் அட்ரினலின் வேதிப்பொருள் அபரிமிதமாக சுரக்கும். இதன் விளைவாக காந்தியின் நோஞ்சான் உடல் கொண்டவர்களின் உடலும் கூட வேகமாக முறுக்கிக்கொண்டு வலிமை பெறும். இதற்கு காரணம், அப்போது ஏற்படும் நெருக்கடிக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்குத்தான்.

அதிகளவிலான அட்ரினலின் சுரப்பது உடலை கட்டுப்படுத்தமுடியாதபடி மாற்றிக்கொண்டிருக்கும். இதனை அறிவிக்கும் உடல்மொழிதான் உடல் நடுங்குவது. இதன் அர்த்தம் நீங்கள் ஹெர்குலஸ் போல வலிமை பெற்றவர் ஆகிறீர்கள் என்பதல்ல. அந்த நேரத்திற்கு அப்படி இருப்பீர்கள். அம்புட்டுத்தேன்.

நன்றி: பிபிசி